டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே திடீர் மீட்டிங்.. ஏன் முக்கியம்?

Google Oneindia Tamil News

டெல்லி: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே வியாழக்கிழமை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரம் மிக மோசமான ஒரு நிலையில் உள்ளது. சமீபத்தில் தான் இந்தியாவிடம் உதவியும் கூட கேட்டிருந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் ரூ 200ஐ தாண்டி சரிவந்துவிட்டது. இதனால் அங்கு விலைவாசி விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

 இந்தியாவின் முதல் ஓமிக்ரான் நோயாளி.. தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? வெளியான பரபர தகவல் இந்தியாவின் முதல் ஓமிக்ரான் நோயாளி.. தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? வெளியான பரபர தகவல்

 இலங்கை பிரச்சினை

இலங்கை பிரச்சினை

இலங்கை பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பியிருந்தது. கொரோனா தொடங்கியதில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாகவே சுற்றுலாத் துறை கிட்டதட்ட காணாமல் போகிவிட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்தது. இத்துடன் வேறு சில காரணங்களும் சேர்ந்துகொள்ள அந்நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளதால், அடுத்தாண்டு உணவுப் பஞ்சம் கூட ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

 2 கோரிக்கை

2 கோரிக்கை

இதனிடையே இந்தியாவிடம் 2 முக்கிய கோரிக்கைகளை இலங்கை வைத்திருந்தது. இந்தியா ஏற்கனவே கொடுத்திருந்த கடனை தற்போது திரும்பக் கேட்கக் கூடாது எனக் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டார். அதேபோல கடந்த 2020 மே மாதம் 1.1 பில்லியன் டாலர் நாணய பரிமாற்றம் செய்யுமாறு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், இது தொடர்பாக இந்தியா இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

 இந்தியப் பயணம்

இந்தியப் பயணம்

இந்தச் சூழலில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இலங்கையின் கோரிக்கைகள் இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தவே அவர் இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பசில் ராஜபக்சே பல முக்கிய அமைச்சர்களை நேரில் சந்தித்தார்.

 தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு

தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். மேலும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் அவர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட மற்றும் நிதிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உடன் இருந்தனர்.

 நிதியமைச்சர் உடன் சந்திப்பு

நிதியமைச்சர் உடன் சந்திப்பு

முன்னதாக, கடந்த புதன்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பசில் ராஜபக்சே சந்தித்தார். அப்போது இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தனர். மேலும் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவுக்கு பசில் ராஜபக்சே நன்றி தெரிவித்தார் நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sri Lanka Finance Minister Basil Rajapaksa met with the National Security Advisor of India Ajit Kumar Doval. Sri Lanka Finance Minister on a two-day official visit to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X