டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமாரு, இந்தியாவை விட கெட்டியா பிடிச்சுக்கோ.. முக்கிய துறைகளில் முதலீடுகளை வாங்கிட போராடும் இலங்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிடம் இருந்து மிக முக்கியமான துறைகளில் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான பகீரத முயற்சிகளில் இலங்கை இறங்கி உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் கடன் சுமையில் சிக்கி தத்தளிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு சுத்தமாக இல்லை என்கிற நிலை. இதனால் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அளவுக்கு மோசமாகிவிட்டது.

 கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம் கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம்

இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்த சீனா, குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கிறது. அப்படி செலுத்தாத சூழ்நிலையில் சீனா, இலங்கையில் மேற்கொண்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் அதை ஒட்டிய நிலப் பகுதிகளை கையகப்படுத்திக் கொள்கிறது. இதற்கு சிங்களர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிடம் தஞ்சம்

இந்தியாவிடம் தஞ்சம்

இதனால் இயல்பாகவே அண்டை நாடான இந்தியாவிடம் தஞ்சமடையும் கட்டாயத்துக்கு இலங்கை சென்றுவிட்டது. இந்தியாவிடம் நல்லுறவை வளர்த்து இந்தியாவுக்கான திட்டங்களை இலங்கையில் செயல்படுத்த அனுமதித்து பெருமளவு கடன் பெற வேண்டும்; முதலீடுகளை பெற வேண்டும் என்கிற யுக்தியுடன் களமிறங்கி இருக்கிறது இலங்கை.

அடடே நகர்வுகள்!

அடடே நகர்வுகள்!

இதன் முதல்கட்டமாகவே திருகோணமலை எரிபொருள் எண்ணெய் டேங்குகளை இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது இலங்கை. இந்தியாவுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவே மன்னார் வளைகுடாவில் சீனாவுக்கு கொடுத்திருந்த மெகா காற்றாலை திட்டத்தையும் ரத்து செய்தது இலங்கை. இந்த திட்டமும் இப்போது இந்தியா வசமாக உள்ளது.

பாதுகாப்பு துறை ஒப்பந்தம்

பாதுகாப்பு துறை ஒப்பந்தம்

இதனிடையே பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் முனைப்பாக உள்ளது இலங்கை. இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவ அடிப்படையில் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கும் இலங்கை முயற்சித்து கொண்டிருக்கிறது. இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுதல், தகவல்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம் என விரும்புகிறது இலங்கை.

சுற்றுலாதுறையில் முதலீடுகள்

சுற்றுலாதுறையில் முதலீடுகள்

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளில் 25% இந்தியர்கள்தான். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தியாவுடனான சுற்றுலாதுறை சார் ஒப்பந்தங்களை விரைவுபடுத்தவும் இலங்கை விரும்புகிறதாம். இலங்கை சுற்றுலாத்துறையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என கணக்குப் போடுகிறது இலங்கை. இப்படி முக்கியமான துறைகளில் இந்திய முதலீடுகளைப் பெறுவதற்காக அடுத்தடுத்த நகர்வுகளை இலங்கை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

English summary
According to the Media Reports, Srilanka wants India's investments in important sectors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X