கொரோனா வழக்குகள்: உச்சநீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விலகல்
டெல்லி: கொரோனா வழக்குகள் விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஸ்டெர்லைட் (வேதாந்தா) நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விலகியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் மத்திய அரசை நீதிமன்றங்கள் கடுமையாக சாடி வருகின்றன.

இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கொரோனா தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்; இந்த வழக்குக்கு ஆலோசகராக ஹரீஷ் சால்வே நியமிக்கப்படுகிறார் என தலைமை நீதிபதி போப்டே (பாப்டே) தெரிவித்திருந்தார்.
மேலும் ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வேதாந்தா குழுமத்தின் சார்பாக ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடியிருந்தார். இதனால் ஹரீஷ் சால்வே நியமனம் சர்ச்சையானது.
இந்த பின்னணியில், கொரோனா வழக்குகளுக்கான உச்சநீதிமன்றத்தில் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹரீஷ் சால்வே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தலைமை நீதிபதி பாப்டேவின் நிழலில்தான் தாம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். ஆகையால் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications