மணிப்பூர் இணைய சேவை துண்டிப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: மணிப்பூரில் இன வன்முறைகளால் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையே ஒரு மாத காலத்துக்கும் மேலாக மோதல் நீடிக்கிறது. மணிப்பூரில் தொடர் வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மத்திய அரசு அமைதி முயற்சிகளை மேற்கொண்ட போதும் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குக்கி இன மக்கள் ஆயுதமேந்தி, பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த இருவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ந் தேதி இவ்வழக்கை தொடர்ந்திருந்தனர். மணிப்பூரில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் அனிருத்தா போஸ், ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உச்சநீதிமன்றத்தில் ஏன் வழக்கு தொடரப்பட்டது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications