"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது அக்கறை காட்டுவதே இல்லை.." உச்ச நீதிமன்றம் சொன்ன மிக முக்கிய கருத்து
டெல்லி: மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர், குடியரசுத் தலைவர் காலக்கெடுவை நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அதைத் தொடர்ந்து 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்திருந்தார். இது தொடர்பான மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் பல முக்கிய கருத்துகளை கூறியது. ஆளுநர்கள் மசோதாக்களில் முடிவெடுப்பதில் அக்கறை காட்டவில்லை என்பதாலேயே நீதிமன்றம் இதில் தலையிட நேர்ந்ததாக நீதிபதிகள் கூறினர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இது மட்டுமின்றி சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடுவை நிர்ணயித்தும் தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இதுவரை ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மசோதா மீது முடிவெடுக்க எந்தவொரு காலவரம்பும் இல்லாமல் இருந்தது. இதனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படுவதில்லை.. அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பின. இந்த விவகாரத்தில் தான் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது அப்போதே நாடு முழுக்க அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ஜனாதிபதி திரௌபதி முர்மு இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். ஜனாதிபதி திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியது தொடர்பான வழக்கில் ஏற்கனவே தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசு
ஜனாதிபதியின் குறிப்பின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது. குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு ஏற்கனவே உள்ள சட்டத்தைச் சீர்குலைப்பதாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவதற்காகச் செய்யப்பட்ட மேல்முறையீடு போலவே தெரிவதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது. கேரள அரசும் கிட்டத்தட்ட இதேபோன்ற பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. ஜனாதிபதி குறிப்பை அப்படியே திருப்பி அனுப்ப வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசும் தனது எழுத்துப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் நிர்வாகம் அதிகாரப் பிரிவினையைப் பாதிக்கும் என்றும் கூறியிருந்தது. மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது என்பது சிறப்புரிமை என்றும் அதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று விசாரணை
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்தது அரசின் பணியில் தலையிடுவதாக இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதியின் கேள்விகள் தீர்ப்பின் மேல்முறையீடாக பார்க்க வேண்டாம் என்றும் சுப்ரீ்ம கோர்ட் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவே பார்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
பல முறை சொல்லிவிட்டோம்
அப்போது நீதிபதிகள், "மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரங்களில் ஆளுநர் காட்டவில்லை என பலமுறை கூறிவிட்டோம். மோசமான நிலை வந்தே பிறகே நீதிமன்றம் தலையிட்டு அதை சரி செய்ய வேண்டி இருந்தது" என்றார். மேலும், இது அது மேல்முறையீட்டு விசாரணை இல்லை என்றும் ஆலோசனை அதிகார வரம்பிலேயே விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். அதாவது ஒரு குறிப்பிட்ட தீர்ப்பு சரியானது இல்லை என்ற கருத்தை சொல்ல முடியமே தவிர ஏற்கனவே உள்ள தீர்ப்பை இது ரத்து செய்யாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் விளக்கினர்.
இருப்பினும் அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீதிமன்றம் ஆலோசனை அதிகார வரம்பில் கூட ஒரு தீர்ப்பை ரத்து செய்ய முடியும்" என்று சொல்லி அதற்கான முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டினார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி காவாய், "ஒரு கருத்தை ரத்து செய்ய முடியும், ஒரு முடிவை அல்ல" என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு வாதம்
ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அதிலேயே அவரது பதில்கள் இருப்பதாகவும் இதனால் அந்த கேள்விகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கேரளாவும் கிட்டத்தட்ட இதே வாதத்தை முன்வைத்தது. காவிரி, குஜராத் சட்டசபை கேஸ்களை போல ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் திருப்பி அனுப்ப வேண்டும் என கேரளா தனது வாதத்தை முன்வைத்தது.
உச்ச நீதிமன்றம்
அப்போது மத்திய அரசு மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசியலமைப்பு சட்டம் விரைவாக மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என கூறியுள்ளதே தவிர காலக்கெடு எதையும் நிர்ணயம் செய்யவில்லை" என்றார். அதற்கு நீதிபதிகள், "விரைவாக என்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஒப்புதல் தர வேண்டும் என்றே அர்த்தம்" என்றார்.
இப்படி இந்த வழக்கில் பல காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நாளையும் தொடர்கிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications