சுஷாந்த் சிங் விவகாரம்: ஆதித்ய தாக்கரேவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தனும்.. பாஜக எம்எல்ஏ பகீர்
டெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பி பேசிய ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவு எம்.பி ராகுல் ஷெவாலே, சுஷாந்த் சிங் தற்கொலைக்கு முன்பாக ரியா சக்ரபோர்த்திக்கு 44 அழைப்புகள் ஏயூ என்ற பெயரில் இருந்து வந்து இருக்கின்றன. இந்த ஏயூ என்பவர் ஆதித்ய தாக்கரேவா என சந்தேகம் எழுப்பி பேசியிருந்தார்.
பீகாரை சேர்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி' படத்தின் நடித்ததன் மூலம் நாடு முழுக்க பிரபலம் அடைந்தார்.

சுஷாந்த் சிங்கை தற்கொலை?
இளம் நடிகராக பாலிவுட் உலகில் பெரும் பிரபலம் அடைந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது. எனினும் விசாரணை நடத்திய போலீசார் இது தற்கொலைதான் என்று தெரிவித்தனர். எனினும் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக பாலிவுட் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்
இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. பீகார் காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது மேலாளராக இருந்த திஷா சலைனும் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவங்கள் பாலிவுட் திரையுலகை மட்டும் இன்றி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டு
இந்த தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையிலும் எதிரொலித்தது. சிவசேனா கட்சி இரு அணிகளாக பிளவு பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

ஆதித்ய தாக்கரேக்கு என்ன தொடர்பு?
இந்த நிலையில், மகக்ளவையில் பேசிய சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்பியான ராகுல் ஷெவாலே ஆதித்ய தாக்கரேவை இந்த விவகாரத்தில் இழுத்து பேசினார். அவர் கூறுகையில், "சுஷாந்த் சிங் மரணத்துக்கும் ஆதித்ய தாக்கரேக்கும் என்ன தொடர்பு? இது தொடர்பாக சிபிஐ விசாரணை என்ன சொல்கிறது?" என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனால், சுஷாந்த் சிங் விவகாரம் மீண்டும் பாலிவுட் திரையுலகில் பேசுபொருளானது.

உண்மை கண்டறியும் சோதனை நடத்தனும்
இந்த நிலையில், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியிருக்கும் பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானே, ஆதித்ய தாக்கரேவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவின் பெயர் இழுக்கப்படுகிறது என்றும் தாக்கரே குடும்பத்திற்கு வலதுகரமாக இருந்த எம்.பி முன்வைத்து இருக்கும் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆதித்ய தாக்கரேவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் மட்டுமே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் உண்மை வெளிப்படும் என்று பேசியுள்ளார்.

விசுவாசம் இல்லாதவர்கள்
ஆனால், ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.பி ராகுல் ஷெவாலேவின் கருத்தை ஆதித்ய தாக்கரே நிராகரித்து இருந்தார். ஆதித்ய தாக்கரே இது பற்றி பேசுகையில், "கட்சிக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசம் இல்லாதவர்கள் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருப்பார்கள். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிலபேர ஊழல்கள் தொடர்பான கேள்விகளை திசை திருப்பும் முயற்சியாக இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்" என்றார்.
-
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications