டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பைல் 35".. டெல்லிக்கு முதல்வர் ஸ்டாலின் எடுத்த சென்ற முக்கியமான கோப்பு.. உள்ளே இருப்பது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சென்று இருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பிற்காக முக்கியமான பைல் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொண்டு சென்றுள்ளார்.. இந்த லிஸ்ட்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். முதல்வர் ஆன பின் முதல்முறையாக அவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துகிறார்.

தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம் இப்போதே இணையத்தில் பரபரபப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் என்ன பேச போகிறார், என்ன மாதிரியான கோரிக்கைகளை வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறப்பு விமானத்தில் டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.. மோடியுடன் மாலை சந்திப்பு.. ஷெட்யூல் இதோ! சிறப்பு விமானத்தில் டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.. மோடியுடன் மாலை சந்திப்பு.. ஷெட்யூல் இதோ!

மீட்டிங்

மீட்டிங்

இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இடையிலான மீட்டிங் நடக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடன் முக்கியமான பைல் ஒன்றை எடுத்து சென்றுள்ளார். பைல் 35 என்று அழைக்கப்படும் இந்த கோப்பில் மொத்தம் 35 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பைல்தான் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

உரிமை

உரிமை

முதல்வர் - பிரதமர் இடையிலான இந்த மீட்டிங் பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. நீட் தடை, ஜிஎஸ்டி ஒதுக்கீடு, வேக்சின் ஒதுக்கீடு என்று பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் வைக்க போகிறார். 7 பேர் விடுதலை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

 செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு வேக்சின் உற்பத்தி மையத்தை செயலுக்கு கொண்டு வருவது குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. வெளிப்படையான இந்த பிரச்சனைகள் தவிர்த்து, மேலும் பல மாநில பிரச்சனைகள், மாநில உரிமைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்க இருக்கிறாராம். மொத்தம் 35 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க உள்ளார்.

பைலில் என்ன உள்ளது

பைலில் என்ன உள்ளது

பெரும்பாலும் மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைதான் இதில் உள்ளன என்று கூறப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும், விவசாய சட்டம் வாபஸ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் இந்த பைலில் அடங்கி இருப்பதாக தெரிகிறது.

உரிமைகள்

உரிமைகள்

தமிழ்நாடு உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளை பேசும் விதமாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் இந்த கோப்பில் 35 விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் இந்த கோப்பை கொடுப்பார். அதோடு இந்த கோப்பில் இருக்கும் விஷயங்கள் குறித்து பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை வைத்து ஆலோசனை நடத்துவார் என்கிறார்கள்.

English summary
Tamilnadu CM M K Stalin will give a detailed file with 35 demands to PM Modi in his today meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X