மாறி மாறி தண்ணி காட்டுறியே தெய்வமே? இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா! திடீரென சரிந்த பாதிப்பு!
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே கூடுவதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்துக்கும் மேல் என்று இருந்த நிலையில் இன்று பாதிப்பு பத்தாயிரத்திற்கும் கீழே வந்துள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.
சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று மற்றும் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பின்படி சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் சரிந்துள்ளது.

பாதிப்பு சரிவு
இந்தியாவில் நேற்று முன்தினம் 12,899 பேருக்கு பாதிப்பும், நேற்று 12,781 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி இருந்த நிலையில் இன்று 9 ஆயிரத்து 923 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
கொரோனா காரணமாக 17 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 293 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 79 ஆயிரத்து 313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 196 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 3 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 24 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications