நடப்பு ஆண்டில் கடைசி நிகழ்வு.. நெட்டிசன்களை வாவ் போட வைத்த 'சூப்பர் மூன்'
டெல்லி: நடப்பு ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வு நேற்று இரவு நிகழ்ந்தது. இதனை பல்வேறு நாட்டு மக்கள் பார்த்து ரசித்ததோடு, அதனை புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
விண்வெளியில் நிகழும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சர்யம் அளிக்கக்கூடியது தான். அந்த வகையில், பூமியை சுற்றி வரும் நிலவினை ஒருசில நேரம் நாம் சூப்பர் மூன் என அழைப்போம்.
ஏன் நாம் அதனை சூப்பர் மூன் என்று அழைக்கிறோம் என்றால்... பூமியை சுற்றி வரும் நிலவானது, அதன் சுற்றுவட்டப்பாதையில் மிக குறைந்த நீளத்தில் அதாவது பூமிக்கு அருகில் இருக்கும்போது அதனை நாம் சூப்பர் மூன் என அழைப்போம்.

'சூப்பர் மூன்' நிகழ்வு
குறிப்பாக தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவானது பூமியை சுற்றி வருகையில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 அல்லது 4 முறை பூமிக்கு மிக அருகில் நிலவு காட்சி தரும். அந்த நாளில் நிலவானது வழக்கமான ஒளியை விட அதிகளவு பிரகாசிக்கும். அதாவது நிலவின் வெளிச்சம் சற்று அதிகமாக இருக்கும். இதேபோல் வழக்கத்தை விட நிலவின் அளவானது பெரியதாக இருக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் வழக்கத்தைவிட சூப்பர் நிலவு நேரத்தில் 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு சராசரியாக ஆண்டுக்கு 3 முறையோ அல்லது 4 முறையோ நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்
அதன்படி நடப்பு ஆண்டில் சூப்பர் மூன் நிகழ்வானது நேற்று உலகம் முழுவதும் நிகழும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டர்ஜன் மூன் என்று அழைக்கப்படும் இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நேற்று இரவு வானில் தென்பட்டது. ஸ்டர்ஜென் மூன், கிரீன் கார்ன் மூன், கிரெயின் மூன் மற்றும் ரெட் மூன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நேற்று தென்பட்டது. நிலவு வழக்கத்தை விட பெரிதாக தோன்றியதை பலரும் ரசித்து பார்த்தனர்.

வியந்து பார்த்த மக்கள்
இந்த நிலையில் நேற்று வழக்கத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக வானில் தோன்றிய நிலவை பலரும் கண்டு வியந்து ரசித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து இருந்தன. இதைக்கண்ட நெட்டிசன்கள் வியந்து பார்த்து ரசித்தனர். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பிரகாசமான பெரிதான நிலவாக தோன்றினாலும் நீங்கள் வெளியில் நடந்து சென்றால் இயற்கையாகவே உணர முடியும். ஆனாலும் உள்ளூணர்வில் எப்படியும் வித்தியாசமாக இருக்கும் என்று அமெரிக்காவின் இயற்கை அறிவியல் பற்றிய அருங்காட்சியகத்தின் வானியல் இயற்பியலாளர் ஜாக்கி ஃபேர்டி என்பவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு எப்போ?
இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் தென்பட்டது. இனி இப்படி ஒரு சூப்பர் மூன் அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதிக்குப் பிறகுதான் வானில் தோன்றும் என்று நவ்திஷ் நியூஸ் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு சூப்பர் நிலவையும் படம் பிடித்து பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை வாவ் சொல்ல வைத்துள்ளது. இதில், சூப்பர் மூன் தோன்றும் இந்தக் காலத்தில் அளவுக்கதிமாக மீன்கள் தென்படும் என்பதால், அமெரிக்காவில் வசிக்கும் மீன்பிடி மக்கள் இ ஸ்டர்ஜன் மூன் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications