அடடே.. புத்தாண்டு தினத்தில் மகிழ்ச்சி தகவல்.. 102 ரூபாய் குறைந்த வர்த்தக காஸ் சிலிண்டர் விலை!
டெல்லி: வர்த்தக கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை 1998.50 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
Recommended Video
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் ரூபாய் 50ம் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 175 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

வர்த்தக சிலிண்டர் விலை
கடந்த சில மாதங்களில் வணிகப் பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வீழ்ச்சியைச் சந்தித்து உள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததால் செலவீனம் அதிகரிப்பதாக வியாபாரிகள் கூறியிருந்தனர்.

சிலிண்டர் விலை குறைப்பு
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரவு சற்று குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ள நிலையில் , தற்போது வர்த்தக சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை 1998.50 ரூபாயாக உள்ளது.

வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
இருப்பினும், 14.2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ , 5 கிலோ கலப்பு சிலிண்டர்கள் எடையுள்ள மற்ற வீட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த மாதம் இருந்த விலையே தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில் விலை நிலவரம்
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் 2,234.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் விலை குறைப்பின் காரணமாக தற்போது 2,132 ரூபாயாக உள்ளது. அதேபோல் சென்னையில் தற்போது மானியமல்லாத வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தற்போது 915.50 ரூபாயாகவும், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை 915.50 ரூபாயாகவே உள்ளது. கடந்த 3 மாதங்களாகவே வீட்டு சிலிண்டருக்கான விலை ஒரே விலையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications