டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா வகை வைரஸ்.. கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி பெற்றவர்களையும் தாக்கலாம்.. ஷாக் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்டா வகை கொரோனா வைரஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பெற்றவர்களையும் தாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தை 3,00,000-ஐ தாண்டிய தொற்று தற்போது 1,00,000-க்குள் குறைந்து விட்டது.

    கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிகள்தான். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

    1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு 1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு

    தடுப்பூசி எனும் பேராயுதம்

    தடுப்பூசி எனும் பேராயுதம்

    கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்னும் இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-V தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசிகள் கொரோனா வைரசுக்கு எதிராக வினை புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா(பி .1.617.2) வைரஸ் கோவிஷீல்ட், கோவாக்சின் அளவுகளைப் பெற்றவர்களை பாதிக்கிறது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறுகின்றன. ஆனால் எந்தவொரு ஆய்வும் இதுவரை மதிப்பாய்வு செய்யப்படவில்லை

    தீவிர ஆய்வு

    தீவிர ஆய்வு

    இந்தியாவின் கொரோனா வழக்குகள் குறைந்து வருவதால், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐஜிஐபி) மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவற்றுடன் இணைந்து இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு கொரோனா தொற்றுள்ள 63 பேரின் பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டது. அவர்களில் 36 பேர் இரண்டு டோஸைப் பெற்றனர், 27 பேர் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

    டெல்டா வைரஸ் பாதிப்பு

    டெல்டா வைரஸ் பாதிப்பு

    இந்த குழுவினருக்கு பி .1.617.2 (டெல்டா) உருமாறிய வைரஸ் பாதிப்பு நிலவுவதாகவும், 'இரட்டை டோஸ் தடுப்பூசி போடப்பட்ட குழுவினர் மற்றும் ஒற்றை டோஸ் பெற்ற தடுப்பூசி குழு இரண்டிலும் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை என்றும் எய்ம்ஸ்-ஐஜிஐபி ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த 63 பேரிடமும் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் கிட்டத்தட்ட அனைவருக்கும் 5-7 நாட்களுக்கு உயர் தர இடைவிடாத காய்ச்சல் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    2 டோஸ்கள் பெற்றவர்கள்

    2 டோஸ்கள் பெற்றவர்கள்

    மேலும், டெல்டா வைரஸ் மாறுபாடு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை கொண்டவர்களில் 60% ஆகவும், ஒரு டோஸ் பெற்றவர்களில் 77% ஆகவும் இருந்தது. 63 பேரில் 10 பேர் கோவாக்சின் பெற்றனர், 53 பேர் கோவிஷீல்ட் டோஸை பெற்றனர். இதில் 51 ஆண்கள், 22 பெண்கள் ஆவார்கள். கோவிஷீல்ட்டை பெற்ற 27 நோயாளிகளுக்கு 'டெல்டா' வைரஸ் 70.3% தொற்று வீதத்துடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு தடுப்பூசிகளும் வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும், ஆனால் குறைந்த செயல்திறனுடன் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    காரணம் இதுதான்

    காரணம் இதுதான்

    2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு டெல்டா என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த வைரஸ் தான் இரண்டாம் அலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The study found that the delta-type corona virus also infects those who have been vaccinated against cochlear and covaxin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X