நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. சூரியனில் நெளிந்து செல்லும் பாம்பு? மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : சூரியனில் பாம்பு நெளிந்து செல்வது போன்ற வீடியோவை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அனுப்பிய சன் ஆர்பிட்டர் விண்கலம் வீடியோவாக எடுத்து அனுப்பியுள்ள நிலையில் ஆராய்ச்சியாளர்கள் அது குறித்த காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

மிகச் சிறிய ஒரு கோளான பூமியில் லட்சக்கணக்கான உயிரினங்களும் கோடிக்கணக்கான அதிசயங்களும் நிறைந்து இருக்கிறது. என்றால் முடிவே இல்லாத இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு அதிசயங்கள் கொட்டிக் கிடக்கும்.

அப்படி இந்த முடிவில்லா பிரபஞ்சத்தில் என்னதான் இருக்கிறது என தேட துவங்கிய மனிதன் பூமி சூரிய குடும்பத்தை தாண்டி இன்னும் தேடி வருகிறான். அதன் வெளிப்பாடுதான் விண்வெளி ஆராய்ச்சிகள்.

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி

நிலவில் கால் வைத்தது, செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்தது என நாளுக்கு நாள் ஒவ்வொரு உலக நாடுகளும் ஏதாவது ஒரு வானியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் நூற்றுக்கணக்கான தொலைநோக்கிகள் பிரபஞ்சத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது .குறிப்பாக சூரிய குடும்பத்தின் தலைவனான சூரியனில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூரியன்

சூரியன்

இதுவரை சூரியனின் மேற்பரப்பில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என பலரும் நினைத்து இருப்பார்கள். இந்த நிலையில் சூரியனின் நெளியும் பாம்பு போன்ற ஒரு வீடியோ தற்போது வாடியில் ஆராய்ச்சியில் புதிய தேடுதலை உருவாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சன் அண்ட் ஸ்பேஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சூரியன் சிரிப்பது போன்ற ஒரு புகைப்படம் உலக அளவில் வேகமாக பரவியது.

நெளியும் பாம்பு

நெளியும் பாம்பு

இந்நிலையில் தற்போது சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற ஒரு வீடியோ உலக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியன் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக சன் ஆர்பிட்டர் விண்கலத்தை ஏவியது. 10 அதிநவீன கருவிகளுடன் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் சூரியன் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. அந்த வகையில் சூரியனின் குளிர்ந்த வளிமண்டலத்தின் வாயுக்கள் அடங்கிய டியூப் போன்ற அமைப்பு சூரியனின் ஈர்ப்பு மண்டலத்தில் ஊறுவது போல காட்சியை சன் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

சூரியனில் இருக்கும் வாயுக்கள் பிளாஸ்மா நிலையில் அதிக வெப்பம் காரணமாக இருக்கின்றன. சூரியனின் மேற்பரப்பிலேயே சுமார் 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் நிலையில் உள்பகுதியில் மில்லியன் கணக்கான வெப்பம் இருக்கும். சூரியனில் பெரும்பாலும் ஹைட்ரஜன் ஹீலியம் வாயுக்கள் மற்றும் ஆக்சிஜன் இருக்கும் நிலையில் அதீத வெப்பம் காரணமாக பிளாஸ்மா ஒரு குழாய் போன்ற அமைப்பாக உருவாகி பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பிளாஸ்மா சூரியனின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு செல்லும் காட்சி தான் பாம்பு ஊர்வது போல இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+