இன்னும் 4 மாதங்கள்தான் டைம்.. கொரோனா 3ஆம் அலை நிச்சயம் ஏற்படும்.. வல்லுநர் குழுவின் புதிய வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையே இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

    கொரோனா பரவலின் கணிக்க ஐஐடி பேராசிரியர்களைக் கொண்ட மத்திய அரசு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு சூத்ரா என்ற மாடலின் அடிப்படையில் கொரோனா பரவலைக் கணித்து வருகிறது.

    கொரோனா 3ஆம் அலை

    கொரோனா 3ஆம் அலை

    கொரோனா 3ஆம் அலை குறித்து இந்தக் குழுவின் உறுப்பினரும் ஐஐடி கான்பூர் பேராசிரியருமான மனிந்திர அகர்வால் தனது ட்விட்டரில், "பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. வரும் மாதங்களில் மூன்று விதமான சூழல்கள் ஏற்படலாம் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

    3 வாய்ப்பு

    3 வாய்ப்பு

    புதிய உருமாறிய கொரோனா மேலும் ஏற்படவில்லை என்றால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுவோம். அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை இருக்கும். மற்றொன்று நாட்டிலுள்ள 20% பேருக்கு வேக்சினை நாம் செலுத்தினால், வைரஸ் பரவலின் வேகம் குறைவாக இருக்கும். அதேநேரம் மூன்றாவதாகவும் ஒரு சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.

    நான்காம் அலை

    நான்காம் அலை

    அதாவது 25% வரை வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா புதிதாகத் தோன்றினால், அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சம் வரை செல்லும். இது கொரோனா 2அலை சமயத்தில் பதிவான தினசரி வைரஸ் பாதிப்பில் பாதி தான் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். டெல்டா வகை கொரோனா ஏற்கனவே, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களையும்கூட தாக்குகிறது. எனவே, அதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வதன் மூலம் மூன்று மற்றும் நான்காம் அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நாம் குறைக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

    பிரிட்டன் கொரோனா பாதிப்பு

    பிரிட்டன் கொரோனா பாதிப்பு

    இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் வித்யாசாகர், "பிரிட்டனை எடுத்துக் கொண்டால், கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதிப்பு 60 ஆயிரம், உயிரிழப்புகள் 1,200 என்ற விகிதத்தில் இருந்தது. அதுவே நான்காம் அலையின் சமயத்தில் வைரஸ் பாதிப்பு 21 ஆயிரமாகவும் உயிரிழப்பு 14ஆகவும் குறைந்துவிட்டது. கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும், உயிரிழப்புகளையும் தடுப்பூசிகளே குறைக்கிறது. எனவே நாம் எவ்வளவு விரைவாக வேக்சின் பணிகளை மேற்கொள்கிறோம் என்பதும் 3ஆம் அலையை கட்டுப்படுத்த உதவும்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+