அதென்ன தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்? ரிஜிஜு மாற்றத்தின் பின்னணியில் பாஜக அரசின் 9 ஆண்டு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே கொலீஜியம் குறித்து ரிஜிஜூ விமர்சித்து வந்த நிலையில் இந்த மாறுதல் வந்திருக்கிறது.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்புதான் கொலீஜியம். இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக 4 மூத்த நீதிபதிகளும் இடம்பெற்றிருப்பர். இந்த அமைப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கூறி வந்தது. இதில் சமீபத்தில் கிரண் ரஜிஜூ கூறியிருந்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது.

This is the reason for the change of Law Minister Kiran Rijuju in the Union Cabinet

"கடந்த 1993 முன்பு வரை நீதிபதிகள் இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு சட்ட அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டனர். இந்த நடைமுறை மத்திய அரசுக்கு உதவியாக இருந்தது. எனவே தற்போது 'கொலீஜியம்' முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த நியமன முறையின்படி நீதிபதிகளே, நீதிபதிகளை நியமித்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தெரிந்தவர்களை, நன்கு பரிட்சியமானவர்களை நியமிப்பது இயல்பானதுதான்.

சக நீதிபதிகள் நியமனத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி மேலெழுகின்றன. ஆனால் 1993க்கு முன்னர் இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் ஏதும் வரவில்லை. அதுமட்டுமல்லாது, நீதிபதிகள் அடுத்த நீதிபதிகளை நியமிப்பதிலேயே தங்களின் அதிகப்படியான நேரத்தை செலவழிக்கிறார்கள். நீதிபதிகளுக்கு பிரதான வேலை என்பது நீதி வழங்குவது மட்டும்தான்" என்று ரிஜிஜு பேசியிருந்தார். மேலும் நிலுவையிலுள்ள வழக்குகளை சுட்டிக்காட்டியும் அவர் கொலீஜியம் அமைப்புக்கு எதிராக பேசியிருந்தார்.

ஆனால் கொலீஜியத்தை எதிர்த்து பாஜக தரப்பில் பேசிய முதல் நபர் கிரண் ரிஜிஜு இல்லை. ஏனெனில் மத்திய அரசு கொலீஜியத்திற்கு மாற்றாக ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அதாவது மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 6 பேரை உள்ளடக்கிய 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்தது. சொல்லப்போனால் 2014ம் ஆண்டு பாஜக பதவியேற்ற பின்னர் ஏற்படுத்திய பல முக்கிய மாற்றங்களில் ஒன்றாக கொலீஜியத்திற்கு பதில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வருவதும் இருந்தது.

This is the reason for the change of Law Minister Kiran Rijuju in the Union Cabinet

இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு சட்டமாகவும் ஆக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில் இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசின் தலையிடுவதாக இருக்கிறது என்று கறாராக கூறி இந்த ஆணையத்தை செல்லததாக அறிவித்தது.

அதேபோல இது தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வலியுறுத்தலை நிராகரித்ததோடு கொலிஜியம் முறை என்பது, 99 வது அரசமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முன்பிலிருந்தே வழக்கத்தில் இருப்பதாகவும் கூறியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னரே 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' விமர்சித்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா கருத்து கூறியிருந்தார்.

அதாவது, நாட்டில் நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை பரஸ்பரம் மற்றத் துறையினரின் பணியில் தடையை ஏற்படுத்தாமல் செயலாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். இதன் மூலம் இந்த ஆணையத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்பது ஓரளவு தெளிவாக தெரிய வந்ததுது.

சரி நீதிமன்றம் இவ்வளவு எதிர்த்தும், மத்திய அரசு ஏன் தொடர்ந்து கொலீஜியம் குறித்து பேசி வருகிறது? என்று பார்த்தால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் அந்த இரண்டு முக்கியஸ்தர்கள் யார் என்பதுதான் இங்கு சிக்கல். பெரும்பாலும் அவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சட்ட வல்லுநர்களாக இருப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனவேதான் இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன.

அதேபோல கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றம் இந்த ஆணையத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருந்ததை அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கௌடா கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே அப்போதிருந்தே மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் கொலீஜியம் அமைப்பு முறை குறித்து மோதல் போக்கு நீடித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+