Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்திய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கும் சீனா! " திபெத் மாஜி தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களைத் தன்வசப்படுத்தச் சீனா முயல்வதாக திபெத் அரசின் மாஜி தலைவரான லோப்சங் சங்காய் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவிடம் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ள அவர், கொஞ்சம் மிஸ்ஸானாலும் கூட சீனா தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கும் என எச்சரித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான சீனாவில் பல பிராந்தியங்களுக்குத் தன்னாட்சி உரிமை கொண்டதாக இருக்கிறது. அதாவது இந்தப் பிராந்தியங்களில் தனி அரசு இருக்கும். அவை சீனாவுக்குக் கீழ் இருந்தாலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும். குவாங்சி, இன்னர் மங்கோலியா, நிங்சியா உள்ளிட்ட பிராந்தியங்களை நாம் சொல்லலாம்.

Tibet Leader Lobsang Sangay Warns India of China s Elite Capture Strategy What does it really means

திபெத் மாஜி தலைவர்

அதேபோலத் தான் திபெத்தும் கூட தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கிறது. இருப்பினும், திபெத்தில் உள்ள மக்கள் பலரும் திபெத் என்பது தனி நாடு என்றும் அது சீனாவின் ஒரு பகுதி இல்லை என்றே சொல்லி வருகிறார்கள். இதுபோல சொல்வோருக்கு எதிராக எப்போதும் சீனா கடுமையான நடவடிக்கை எடுக்கும். அப்படி திபெத் உரிமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருபவர் டாக்டர் லோப்சங் சங்காய். திபெத் அரசின் மாஜி தலைவரான லோப்சங் சங்காய், நாடுகடத்தப்பட்டுள்ளார்.

சீன தூதரகத்தின் முயற்சி

இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் லோப்சங் சங்காய் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது இந்தியாவில் உள்ள சீன தூதரகம் இந்திய அரசியல்வாதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதாகவும் இதன் மூலம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும், "சீனா எப்போதுமே இதைத் தான் செய்யும்.. தலைவர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், இப்போது யூடியூபர்கள் என அனைவரையும் விலைக்கு வாங்கிவிடுவார்கள்.. திபெத், சின்ஜியாங், இன்னர் மங்கோலியா போன்ற பகுதிகளை இப்படித் தான் அவர்கள் ஆக்கிரமித்தனர். அதே யுக்தியை இந்தியாவிலும் பயன்படுத்த முயல்கிறார்கள்.

கவனம் தேவை

கவனமாக இல்லாவிட்டால் சீனாவின் பிளானில் இருந்து இந்தியாவும் தப்ப முடியாமல் போகலாம். டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் தேசியத் தினக் கொண்டாட்டங்களைப் பாருங்கள். அதில் யார் கலந்து கொள்கிறார்கள் என்று கவனியுங்கள். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எனப் பலரையும் பார்க்கலாம். அதற்காக இவர்களைச் சீனா விலைக்கு வாங்கிவிட்டது என நான் சொல்லவில்லை. அதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றே சொல்கிறேன்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா என்ன செய்துள்ளது என்பதைப் பார்த்தாலே உங்களுக்கு இது புரியும். நேபாளத்தில் ஒரு கட்சி வெளிப்படையாகச் சீனாவுக்கு ஆதரவாக இருந்தது, மற்றொன்று இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. அங்கு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு நாடுகளிலும் ஆளும் தரப்பைச் சீனா தன்வசம் கொண்டு வந்துவிட்டது. பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் சீனாவுக்கு ஆதரவாக உள்ளன.

சீனாவின் செல்வாக்கு

ஆசியா மட்டுமில்லை. உலகெங்கும் கூட சீனா இந்தத் திட்டத்தை தான் செயல்படுத்துகிறது. ஐரோப்பாவில் சீனாவைப் புகழும் அமைச்சர்கள், சில மாதங்களிலேயே சீனாவின் முக்கிய நிறுவனங்களில் இயக்குநர்களாகப் பணி அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்குப் பல நூறு கோடி சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இப்படித் தான் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துகிறது.

இதனால் தான் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுக்கு உதவுவோரை நாம் கண்காணிக்க வேண்டும்.

உலகளவில் சீனா செய்வதை பாருங்க

மாலத்தீவுகள், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சீனா ஏன் ஆதரவளிக்கிறது? இந்தியாவைத் தாக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களைச் சீனா ஏன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கிறது? ஏனென்றால் அவர்கள் இந்தியாவைக் காலி செய்து தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சீனாவுடன் இணைந்து செயல்பட்டு, லாபம் ஈட்ட முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். எனவே, தாமதிக்காமல் இந்த விஷயத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+