டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் வேலையைக் காட்டிய கொரோனா! சற்றே உயர்ந்த இன்றைய பாதிப்பு! பலி எண்ணிக்கை மட்டும் இவ்வளவா?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

சற்றே அதிகரிப்பு

சற்றே அதிகரிப்பு

இந்நிலையில் இந்தியாவில் நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று பாதிப்பு சுமார் 1000 என்ற அளவுக்கு குறைந்து 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.

உயரும் பலி எண்ணிக்கை

உயரும் பலி எண்ணிக்கை

அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 20க்கும் மேல் என்ற அளவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 79 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கொரோனா பரவல் அதிகரிப்பு.. தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் - விஜயபாஸ்கர்
    தடுப்பூசி அளவு

    தடுப்பூசி அளவு

    மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 13 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 197 கோடியே 87லட்சத்து 55 ஆயிரத்து 952 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 101கோடியே 69 லட்சட்சத்து 56 ஆயிரத்து 614 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 91கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 914 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 கோடியே 54 லட்சத்து 08 ஆயிரத்து 424 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

    English summary
    While there has been an imbalance in the number of corona cases in India for the past few days, today's corona cases have slightly increased compared to yesterday's cases, according to a statement issued by the Union Ministry of Health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X