Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்லிமென்ட் ரவுண்டப்: நாடாளுமன்றத்தில் இன்று நடந்தவை என்னென்னெ?.. முழு தொகுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரபரப்பான விவாதங்களுடன் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று 10-வது நாளை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடந்த முக்கியமான நிகழ்வுகளை தொகுப்புகளாக பார்க்கலாம்.

* ஹெலிகாப்டர் விபத்தில் நமது முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வந்த எதிர்க்கட்சிகள் இன்று மட்டும் போராட்டத்தை நிறுத்தி வைத்தன. அதே வேளையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் சபைக்கு வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Today Parliament roundup: Highlights of important events

* நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நவம்பர் 29-ம் தேதிக்குப் பிறகு, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்தது இதுவே முதல் முறையாகும்.

* கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சிமாநாட்டில் 2070-ம் ஆண்டுக்கான 'நெட் ஜீரோ' இலக்கை நிர்ணயித்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி "வோல்ட் ஃபேஸ்" செய்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

* ''கிளாஸ்கோ காலநிலை உச்சிமாநாடு நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பே நிகர பூஜ்ஜிய இலக்கை அறிவிக்க மத்திய அரசு எந்த விருப்பத்தையும் காட்டவில்லை. உண்மையில் சுற்றுச்சூழல் செயலாளர் அதை ஊடகங்களில் நிராகரித்தார்'' என்று திரிணாமுல் உறுப்பினர் சவுகதா ராய் குற்றம்சாட்டினார். நிகர பூஜ்ஜிய இலக்கை நிரூபிக்க ஏதேனும் நம்பகமான ஆராய்ச்சி உள்ளதா? நிகர ஜீரோ இலக்கில் ஏதேனும் விவாதம் நடத்தப்பட்டதா? என்றும் சவுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

* விவசாயிகள் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார பண இழப்பீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று ராஜ்யசபாவில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் தலைவர் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

* இதற்கு பதில் அளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ''விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்தின் போது காவல்துறை நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை'' என்று ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு போன்றவை வழங்குவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான அடுத்தகட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்படும் மசோதா குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

* பயண நோக்கத்திற்காக மொத்தம் 108 நாடுகள் இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் இன்று மக்களவையில் தெரிவித்தார். இது தொடர்பாக டிசம்பர் 6-ம் தேதி வரை கிடைத்த தரவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

* கொரோனா ஓமிக்ரான் வைரஸ் அச்சம் உள்ளதால் ரெயில்களில் முன்பதிவு குளிர்சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகை வழங்குவது குறித்து அரசு கவனமாக செய்லபடும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

* இந்தியாவில் டெல்டா வைரஸின் துணை வகை வைரசான AY.4.2 பிறழ்வின் 18 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களைவையில் தெரிவித்தார். 10 பாதிப்புகள் குஜராத்தில் இருந்தும், 4 தமிழ்நாட்டிலிருந்தும், 2 அஸ்ஸாமிலிருந்தும், மற்றும் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து தலா ஒரு பாதிப்பு உள்ளதாகவும் இணை அமைச்சர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+