இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகிவிட்டது.
Recommended Video
சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவி வருகிறது.
இதற்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உயிர் பலி நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 2,900-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
Update on #COVID19:
— Ministry of Health (@MoHFW_INDIA) March 2, 2020
Two positive cases of #nCoV19 detected. More details in the Press Release.#coronoavirusoutbreak #CoronaVirusUpdate pic.twitter.com/kf83odGo8f
இது வரை கொரோனா வைரஸால் 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இருவர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருந்து அது குணமான நிலையில் தற்போது இந்தியாவில் மேலும் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இத்தாலிக்கு சென்றுவிட்டு திரும்பியதால் டெல்லி நபருக்கும், துபாய் சென்றுவிட்டு திரும்பியதால் தெலுங்கானா நபருக்கும் கொரோனா பரவியது.
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications