ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்கள் கண்ணியத்திற்கு மதிப்பு கொடுங்க.. விமானப்படை வேண்டுகோள்
டெல்லி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என இந்தியா விமானப் படை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக இந்த நீதிமன்றம் முழுமையாக விசாரித்து உண்மையான காரணங்கள் விரைவில் வெளிவரும் என இந்திய விமான படையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் தெரிவிப்பதை தவிர்க்கலாம் என்றும் விமானப் படை கேட்டுக் கொண்டுள்ளது.

முப்படைத் தளபதி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். கோவை மாட்டம் சூலூரில் இருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது காட்டேரி என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டு இரண்டரை மணி நேரம் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அதில் சிக்கியவர்களை உயிரோடு மீட்க முடியாமல் போனது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு ராணுவ அதிகாரி வருண் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். அவர் தற்போது நீலகிரியில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று இறுதிச்சடங்கு
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் குன்னூரில் இருந்து சாலை மார்க்கமாக சூலூர் விமானப் படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் விமானம் மூலமாக டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய்பட், செயலாளர் அஜீத் தோவால் மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் 13 பேரின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று இரவு அவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Recommended Video

எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ஊடகங்களிலும் நடத்தப்படும் விவாதங்கள் புதுப்புது சந்தேங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து பேசிய மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் "ஜெனரல் பிபின் பயணித்த ஹெலிகாப்டர் மிகவும் நவீன ரகமானது, அதில் இரட்டை இஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்ததை கருத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து எப்படி சாத்தியம்? இந்த விபத்து குறித்து நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை" என தெரிவித்தார்.

விபத்து குறித்து யூகங்கள் வேண்டாம்
இதற்கியே இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விபத்து தொடர்பாக ஒரு பதிவிடப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க இந்தியா விமானப் படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, விபத்தில் உயிரிழந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் தெரிவிப்பதை தவிர்க்கலாம் என்றும் விமானப் படை கேட்டுக் கொண்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications