மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்தப் பணிகளின் நிறைவுக் கட்டம்- அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்!
டெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்தப் பணிகளின் நிறைவுக்கட்டம் டெல்லியில் வழக்கமான அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நிதி அமைச்சராக 7- வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, இன்று டெல்லியில் மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் 'லாக்-இன்' செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. 2024-25-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வருடாந்தர நிதிநிலை அறிக்கை மானியங்களுக்கான தேவை, நிதி மசோதா போன்றவற்றை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டின் அனைத்து ஆவணங்களும் யூனியன் பட்ஜெட் செல்பேசி செயலியில் கிடைக்கும். இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் டிஜிட்டல் வசதியின் எளிய வடிவத்தைப் பயன்படுத்தி அணுகலாம். இந்த செயலி இருமொழிகளில் (ஆங்கிலம் & இந்தி) உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது கிடைக்கும்.
இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற யூனியன் பட்ஜெட் வெப் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
ஜூலை 23-ல் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறைவடைந்த பின் பட்ஜெட் ஆவணங்கள் செல்பேசியில் கிடைக்கும்.

அல்வா தயாரிக்கும் நிகழ்வில், மத்திய நிதியமைச்சருடன் நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இருந்தனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் அச்சிடும் அச்சகத்தை பார்வையிட்டு, தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications