சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
டெல்லி : தமிழகம் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று என்று மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி உள்ளார். இதேபோல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் சிறந்த மருந்துவ கட்டமைப்புகள் உள்ளதாக பாராட்டியது,
தமிழகத்தில் பெரும்பாலான முக்கிய சாலைககள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். கிட்டத்தட்ட எல்லாமே 4 வழிச்சாலை, மிகவும் அகலப்படுத்த இரண்டு வழிச்சாலை என்கிற நிலையே தமிழகத்தில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செல்லும் காரணத்தால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல் தூக்க கலக்கத்தில் அதிகாலையில் செல்லும் வாகனஓட்டிகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகம் சாலை விபத்தை வெகுவாக குறைத்துவிட்டதாக மத்திய அரசு பாராட்டி உள்ளது.

50 சதவீதம் குறைப்பு
எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் "சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு" குறித்து காணொலிக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது. 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளோம். கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம். விரைவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்துவிடுவோம் அதை நிறைவேற்றுவோம்.

இலக்கை எட்டிவிட்டது
நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் ஏற்கெனவே அடைந்துவிட்டது. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழகத்துக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.. பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை 4 முதல் 16 பிரிவுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் வாகன உற்பத்தியாளர்களும், வாகனத்தில் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார் நிதின் கட்கரி.

மருத்துவ கட்டமைப்பு
இதனிடையே உச்ச நீதிமன்றமும் நேற்று வழக்கு ஒன்றில் மருத்துவ கட்டமைப்பு குறித்து பேசும் போது தமிழகத்தை பாராட்டி உள்ளது. நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு அமைப்பை தமிழகம் கொண்டுள்ளது என்றும், இது COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது தெரிந்தது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இன்சூரன்ஸ் வழக்கு
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கு விசாரணையில் பேசும் போது "தமிழ்நாடு நாட்டின் சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது" என்று பாராட்டினார். . யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டின் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அமல்படுத்துவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்த கருத்தை நீதிபதி தெரிவித்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications