டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா 3-வது அலை உச்சம் பெரும் என்று மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே கொரோனா 3-வது அலை தொடங்கியது போலதான் இருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைரஸின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தென் இந்தியாவில் கேரளாவில் கொரோனா ஏற்கனவே உச்சம் தொட்டுள்ளது. நமது தமிழ்நாட்டிலும் கொரோனா மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லைதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

இதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. வட இந்தியாவை பொறுத்தவரை அசாம், மிசோரம், மேகலாயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது கவலையை எற்படுத்தி உள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகம்

மிச்சிகன் பல்கலைக்கழகம்

இந்த நிலையில்தான் இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தை தொடும் என்று மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியுள்ளனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரமர் முகர்ஜி தலைமையிலான குழுவினர் வாராந்திர ஒப்பீட்டு விகிதங்களைக் கண்காணித்து கொரோனா பாதிப்பு போக்குகளை கண்காணித்து வருகிறது.

டிசம்பரில் உச்சம் தொடும்

டிசம்பரில் உச்சம் தொடும்

தற்போது இந்தியாவில் ஆய்வில் மேற்கொண்டு இருக்கும் பேராசிரியர் பிரமர் முகர்ஜி தலைமையிலான குழு, இந்தியாவில் ஜூலை மாதம் கொரோனா உயர ஆம்பித்துள்ளது. ஆகஸ்டு மாதம் கொரோனா மேலும் உயர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் உச்சம் தொடும் என்று மிச்சிகன் பல்கலைக்கழக பேராசியர்கள் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குழுவினர் இந்தியாவில் பிப்ரவரியில் இரண்டாவது அலை ஏற்படும் என்று ஏற்கனவே கணித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2-வது அலை தொடங்கியது.

கணிப்பு பலித்தது

கணிப்பு பலித்தது

பேராசிரியர் பிரமர் முகர்ஜி தலைமையிலான குழுவினரின் இந்த கணிப்பு இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) -கான்பூர் மற்றும் ஐஐடி-ஐதராபாத் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் கணித்ததைப் போலவே உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரிகள் அக மாடலிங் மதிப்பீடுகள் அக்டோபர் வரை பாதிப்புகள் மீண்டும் உயரத் தொடங்கும் வரை ஒரு மந்தமான நிலை இருக்கும் என்று கூறி இருந்தனர்.

 ஊகங்களை

ஊகங்களை

''எங்களது மாதிரிகள் தற்போது தொற்றுநோய்கள் ஒரு சிறியவேகத்துடன் மீண்டும் உயரக்கூடும் என்று கணித்துள்ளன, இந்த மாத இறுதியில் (ஆகஸ்ட்) இறுதியில் அது மேலும் உயரும். ஆனால் மிக முக்கியமான மூன்றாவது அலை உச்சம் நவம்பர் மாதத்தின் இறுதியில் உச்சம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற ஊகங்களை பேராசிரியர் பிரமர் முகர்ஜி முழுமையாக நிராகரித்துள்ளார்.

மோசமாக தாக்கும்

மோசமாக தாக்கும்

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இந்தியாவில் மூன்றாவது அலை குழந்தைகளை மிக மோசமாக தாக்கும் விவாதம் பற்றி வெளிப்படையாக பேச நான் ஆர்வமாக உள்ளேன். சீரோ கணக்கெடுப்புகள் இளம் வயதினருக்கும் கணிசமான செரோபிரெவெலன்ஸ் இருப்பதைக் குறிக்கின்றன, ஆனால் குழந்தைகளில் தீவிரத்தன்மை பற்றிய அறிக்கைகள் உலகளவில் அரிதானவை. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இந்த நோயின் லேசான வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது' என்று கூறினார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

''இருப்பினும், இந்திய மக்கள்தொகையில் 40 சதவிகிதம் 0-18 வயதுடையவர்கள்தான். அவர்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இந்த வயதினருக்கான தடுப்பூசி செலுத்துதலை நாம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். பல்வேறு உலக நாடுகள் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்தியாவும் குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரலாம். ஆனால் மருத்துவக் குழுக்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஆராய்வது மிக முக்கியம் ''என்று பேராசிரியர் பிரமர் முகர்ஜி கூறியுள்ளார்.

வேகம் குறைவு

வேகம் குறைவு

'இப்போது தேவைப்படுவது தடுப்பூசிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும், இதனால் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கும் நேரத்தில், மக்கள் தொகையில் நியாயமான அளவு பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மிகக் குறைவாகும்' என்று பிரமர் முகர்ஜி நம்பிக்கை ஊட்டினார். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை
    இலக்கில் தடுமாறும் இந்தியா

    இலக்கில் தடுமாறும் இந்தியா

    இந்தியா ஜூலை மற்றும் ஆகஸ்ட் வரை நாள் ஒன்றுக்கு 40 லட்சம் டோஸ் குறைவாக செலுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில 17,06,598 தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் 15 கோடி தடுப்பூசிடோஸ்கள் செலுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. தினமும் 50 லட்சம் டோஸ்ககள் செலுத்தப்படும். ஒரு நாளைக்கு 50 லட்சம் டோஸ்களுக்கு மேல் செலுத்த முயற்சி எடுபடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறினார். ஆனால் ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி தடுப்பூசி அளவுகள் கிடைத்த நிலையில் 50 லட்சம் தடுப்பூசிகள் என்பது மிக குறைவாகும்.

    கூடுதல் தடுப்பூசி வேண்டும்

    கூடுதல் தடுப்பூசி வேண்டும்

    இந்தியாவில் ஜூலை மாதத்திலும் தடுப்பூசி செலுத்ததில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மத்திய அரசால் எட்ட முடியவில்லை. நாட்டில் கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு பிரதானமான தடுப்பூசிகள்தான் தற்போது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி தேவைகளை நிவர்த்தி செய்ய முடிவயவில்லை. இதனால் கூடுதல் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விரைவான தடுப்பூசியை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    English summary
    University of Michigan professors have warned that the Corona 3rd wave peak will be great in India in November. Various parties have insisted that additional vaccines be brought into use and that rapid vaccination be carried out
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X