இந்தியாவுக்கு பேராபத்து.. ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை நிறுத்தினால் என்ன நடக்கும்? ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை போட்டுள்ளார். ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் பட்சத்தில் 2ம் நிலை தடைகள் போடப்படும் என்று வார்னிங்கும் செய்துள்ளார். ஆனால் டிரம்பை நம் நாடு மதிக்கவே இல்லை. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நிறுத்தினால் நம் நாட்டுக்கு போராபத்து வர உள்ளதாக எஸ்பிஐ வார்னிங் தந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்துள்ளது. நம் நாடு ரஷ்யாவிடம் இணக்கமாக செயல்பட்டு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் டிரம்ப் நம்மை பழிவாங்கும் நோக்கில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் வரி விதிக்கப்படும் என்று மிரட்டினார்.

நம் நாட்டில் கச்சா எண்ணெய் தேவை அதிகம். இதனால் மக்களின் நலன் கருதி தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறோம். இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டுக்கு 2 கட்டமாக தலா 25 சதவீதம் வீதம் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி அமலுக்கு வந்து விட்டது. அடுத்த கட்டமாக இந்த மாத இறுதியில் 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது.
இந்த வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான இந்திய வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா - அமெரிக்காவுக்கான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் டிரம்ப் இன்னொரு மிரட்டலையும் விடுத்துள்ளார்
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் 2ம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் என்னவாகும்? என்பது பற்றி எஸ்பிஐ அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் பிரஷர் மற்றும் விரி விதிப்பால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா இப்போது நிறுத்தினால், இந்த நிதி ஆண்டின் பெரும் இழப்பு ஏற்படும். வரும் மாதங்களில் மட்டும் நாம் எரிபொருளுக்காக 9 பில்லியன் டாலரை கூடுதலாக செலவு செய்ய நேரிடும்.
அதாவது, 78,826 கோடி ரூபாய் இந்தியாவுக்கு கூடுதலாக செலவாகும். இது அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். அதன்படி அடுத்த ஆண்டுக்கு 1,02,918 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.
அதே நேரம், உலகின் 10 சதவீத தேவையை தீர்க்கும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை மொத்த நாடுகளும் நிறுத்தினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் வரை எகிறும். இந்தியா மட்டும் இன்றி இது எல்லா நாடுகளையுமே பாதிக்கும். அதே நேரம் இந்த இழப்பை ஓரளவு சரிகட்ட நாம் மீண்டும் ஈராக்கிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும்; அதற்கு அடுத்தப்படியாக சவுதி மற்றும் அமீரகத்திடம் இருந்து வாங்க வேண்டும்.
ரஷ்யாவிடம் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முன்பு, ஈராக், சவுதி, அமீரகத்திடம் இருந்து தான் அதிக கச்சா எண்ணெய் வாங்கி வந்தோம். மீண்டும் அதையே செய்யலாம். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஈராக், சவுதி, அமீரகத்திடம் இருந்து நாம் இப்போது வாங்கி வரும் கச்சா எண்ணெய் அளவை ஒவ்வொரு மாதமும் உயர்த்தி கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே திடீரென அவர்களிடம் கூடுதல் கச்சா எண்ணெய் கேட்கும் போது எந்த சிக்கலும் நமக்கு வராது. இதன்மூலம் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்ளலாம்'' என கூறப்பட்டுள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை ஈராக், சவுதி, அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் பெருமளவு கச்சா எண்ணெய் வாங்கி வந்தோம். உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதையடுத்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் அதனை நிறுத்தின. இதையடுத்து தான் நம் நாடு நட்பு நாடு என்ற முறையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது. கடந்த 2020ம் ஆண்டில் நம் நாடு மொத்த தேவையில் 1.5 சதவீதம் கச்சா எண்ணெய்யை மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வந்தது. இப்போது இது கிடுகிடுவென அதிகரித்தது.
நட்பு நாடு என்பதால் ரஷ்யாவும் நமக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் தர தொடங்கியது. இதனால் இப்போது நம் நாட்டின் மொத்த தேவையில் 35.1 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறோம். அதாவது நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் முதன்மை சப்ளையராக ரஷ்யா தான் உள்ளது.
கடந்த ஆண்டில் 40 நாடுகளிடம் இருந்து நாம் மொத்தம் 24.5 கோடி டன் கச்சா எண்ணெய் வாங்கி இருக்கிறோம். இதில் ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 8.8 கோடி டன் வாங்கி இருந்தோம். அதுவும் சலுகை விலையில் என்பதால் நம் நாட்டுக்கு பல ஆயிரம் கோடி லாபம் ஏற்பட்டது. இப்போது நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு, உலகளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்று எஸ்பிஐ சார்பில் வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
-
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications