அக்னிபத் வன்முறை! வணக்கம்யா ஆர்மில இருந்து பேசுறேன்! நீ எதுக்கு மிலிட்டரிக்கு? ஆவேசமான ராணுவ வீரர்!
டெல்லி : இந்திய ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டு காலத்துக்கு பணியில் அமர்த்தும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வன்முறை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் ரயில்கள் கொளுத்தப்பட்டன.
தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததோடு, பலரும் காயமடைந்தனர். மேலும் ராணுவ வீரர் கனவில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அக்னிபத் திட்டம்
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தால் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு துணை இராணுவப் படைகள் ஆன மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவ வீரர் வீடியோ
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் "அக்னிபாத் திட்டம் என்பது நாட்டை காக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டமே தவிர தேச துரோகிகளுக்கு இல்லை. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் நான்கு வருடங்களுக்கு பின் தங்களது சொந்த மாநில காவல்துறையில் பணியமர்த்தப்படுவர். இத்திட்டத்தினை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேவையில்லாமல் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.

நாட்டுக்கு பிரச்சினை
இதில் அரசியலையோ மத ரீதியாக கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்த வேண்டாம். இந்தத் திட்டம் நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு மட்டும். நாளைக்கே ஒரு பிரச்சினை என்றால் வீட்டிற்கு ஒரு இளைஞர் சண்டைக்கு வர வேண்டும் என சொன்னால் தற்போதே பணம் கொடுங்கள் போருக்கு வருகிறேன் எனச் சொல்வீர்களா.. இல்லை நாட்டைக் காக்க ஓடி வருவீர்களா?

ராணுவத்துக்கு வேண்டாம்
இந்தியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் நீங்கள் ராணுவத்துக்கு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? புரட்சி செய்யப் போகிறீர்களா? ராணுவத்துக்கு அந்த மாதிரியான ஆட்கள் தேவையில்லை. எதிர்காலத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் இளைஞர்கள் ஏன் ராணுவத்திற்கு வரவேண்டும்.. டாக்டராக இன்ஜினியராக ஊர் சென்று விடலாமே யாரும் ராணுவத்துக்கு வந்துதான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஒரு நாளாவது ராணுவ உடையை அணிய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் வரலாம், நடிகர்கள், அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதை விட நாட்டுக்காக சாவது மேல், ஜெய்ஹிந்த் என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications