ராஜ்யசபாவில் வக்பு மசோதா: ஆதரித்து வாக்களித்த ஒரே ஒரு தமிழக எம்பி ஜிகே வாசன்; அன்புமணி புறக்கணிப்பு!
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இன்று அதிகாலை நடைபெற்ற வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி மட்டும் ஆதரவாக வாக்களித்தார். இந்த வாக்கெடுப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பங்கேற்காமல், புறக்கணிப்பு செய்தார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இம்மசோதா மீது 12 மணிநேரத்துக்கும் அதிகமாக விவாதம் நடைபெற்றது. 60 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணிக்கு லோக்சபாவில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 லோக்சபா எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் விடிய விடிய நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடந்தது. ராஜ்யசபாவிலும் சர்ச்சைக்குரிய இந்த மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின.
ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசன் எம்பி மட்டும், சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வக்பு வாரிய மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பாஜக மட்டும் எதிர்த்தது. அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டசபையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications