டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2ஆம் அலையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.. தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர்கள்.. பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா முதலாவது அலையை எதிர்கொண்டது போல 2-வது அலையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்றும் கொரோனா தடுப்பூசி பற்றிப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுடன் மன் கி பாத் என்ற ரோடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். இன்று 76ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைப்பு... கஸ்டமர்ஸ் போக வேண்டிய டைம் என்ன தெரியுமா? தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைப்பு... கஸ்டமர்ஸ் போக வேண்டிய டைம் என்ன தெரியுமா?

நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார்.

மோடி உரை

மோடி உரை

இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், " கொரோனா தாக்குதல் நமது பொறுமை, வேதனையைத் தாங்கும் சக்தியைச் சோதித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நான் உங்களுடன் உரையாற்றுகிறேன். இந்த கொரோனா காரணமாக நெருங்கிய பலரை நாம் இழந்துள்ளோம். கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிறகு, நாடு உற்சாகமும், தன்னம்பிக்கையும் நிறைந்ததாக இருந்தது.

ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளது

ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளது

ஆனால் இப்போது இரண்டாம் அலை நாட்டை புயல் போல உலுக்கியுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன் மருந்து உற்பத்தி, ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் நிலையைச் சமாளிக்கப் பல முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். இந்தியாவில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் கருவிகள் போதுமானதாக உள்ளது.

பொய் தகவல்களை நம்பாதீர்

பொய் தகவல்களை நம்பாதீர்

நாடு எதிர்கொண்டுள்ள இந்த போரில் நாம் வெற்றிபெற வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளுக்கு முக்கியதும் கொடுங்கள். கொரோனா பரவல் தொடர்பாக நம்பகமான தகவல்களை மட்டுமே பொதுமக்கள் ஏற்க வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதித்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளன- அதைக் கொடுப்பதில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.

Array

Array

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. மாநில அரசுகளும் தங்களால் முடிந்தவரை பெரும் முயற்சி செய்து வருகின்றன. நாட்டின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் இந்த நோயைப் பற்றி அவர்களுக்கு எல்லா வகையான அனுபவங்களும் கிடைத்தன.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவச தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகத் தொடர்ந்து போடப்படும். பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயல வேண்டும்.

தடுப்பூசி பற்றி வதந்தி

தடுப்பூசி பற்றி வதந்தி

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். நாடு மீண்டும் ஒன்றுபட்டு கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். மக்களின் உயிரைக் காக்க நமது கடமைகளைச் சிறப்பாக செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் செய்ய வேண்டும். இந்த பேரழிவில் இருந்து விரைவில் நாம் ஒன்றாக மீள்வோம்" என்று அவர் பேசினார்.

English summary
Prime Minister Modi's latest Mann Ki Baat speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X