பெண்ணுடன் வெளிய போகணும்.. அமித் மிஸ்ராவிடம் பணம் கேட்ட இளைஞர்! அதுக்கு அவர் செஞ்ச காரியம் இருக்கே
டெல்லி: இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ட்விட்டர் தளத்தில் செய்த செயல் ஒன்று தான் இப்போது இணையத்தில் மிக பெரிய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியாவில் முக்கிய லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தவர் அமித் மிஸ்ரா. இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகள் இவர் விளையாடி வந்துள்ளார்.
ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் வீரர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, நேற்று செய்த செயல் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இதற்காகப் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அமித் மிஸ்ரா
முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா, ட்விட்டர் தளத்தில் ரெய்னாவின் கேட்சை பாராட்டி ட்வீட் ஒன்றைச் செய்து இருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர் தனது காதலியை டேட்டிற்கு அழைத்துச் செல்ல 300 ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் செய்த செயல் தான் நெட்டின்சன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்ன தான் செய்தார் வாங்கப் பார்க்கலாம்.!

கிரிக்கெட் போட்டி
இந்திய அணிக்காக விளையாடி நாட்களிலேயே அமித் மிஸ்ரா முக்கிய வீரர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், ட்விட்டரில் இணைந்த பிறகு அவரது பிரபலம் பல மடங்கு அதிகரித்தது என்றே கூறலாம். அவர் எப்போது ட்விட்டர் தளத்தில் நுழைந்தாரோ அப்போதே தனது ட்வீட்கள் மூலம் கவனத்தை ஈர்க்க தொடங்கினார். அப்படியொரு சம்பவத்தைத் தான் நேற்றும் செய்து இருந்தார். இப்போது சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2022 நடைபெற்று வருகிறது.

ரெய்னா கேட்ச்
அதில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் பென் டன்க்கை அட்டகாசமான கேட்ச் மூலம் அவுட் ஆக்கியிருந்தார். வயதானாலும் கூட ரெய்னாவின் பீல்டிங் திறமை இன்னும் மாறவில்லை என்று பலரும் பாராட்டி வந்தனர். அப்படித்தான் அமித் மிஸ்ராவும் ரெய்னாவை பாராட்டி இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே எனர்ஜி உடன் ரெய்னா பீல்டிங் செய்வதாகவும் இதற்காக டைம் மெசினை தாருங்கள் என்றும் மிஸ்ரா ட்வீட் செய்து இருந்தார்.

கோரிக்கை
மிஸ்ராவின் ட்வீட்டை பலரும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அப்போது சம்பந்தமே இல்லாமல் உள்ளே வந்த நெட்டிசன் ஒருவர் தனது கேர்ள் பிரண்டை டேட்டிற்கு அழைத்துச் செல்ல 300 ரூபாய் வேண்டும் என்று கேட்டு இருந்தார். பொதுவாக இந்த மாதிரியான ட்வீட்களுக்கு பிரபலங்கள் பதில் அனுப்ப மாட்டார்கள். ஆனால், மிஸ்ரா அவரது யுபிஐ தகவல்களை வாங்கியது மட்டுமின்றி 500 ரூபாயையும் அனுப்பி இருந்தார்.

பாராட்டு
அந்த பரிவர்த்தனை தொடர்பான ஸ்கிரீன்ஸார்ட்டையும் இணையத்தில் பகிர்ந்த அமித் மிஸ்ரா டேட்டிங் செல்லும் இளைஞருக்கு வாழ்த்தும் தெரிவித்து ட்வீட் செய்து இருந்தார். அமித் மிஸ்ராவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டித் தள்ளி வருகின்றனர். இதற்கிடையே இந்தியா லெஜெண்ட்ஸ் vs ஆஸ்திரேலியன் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மழை காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

அமித் மிஸ்ரா
39 வயதான அமித் மிஸ்ரா இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் டெல்டில் 76 விக்கெட்களையும் ஒரு நாள் போட்டிகளில் 64 விக்கெட்களையும் எடுத்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த அவர், ஐபிஎல் போட்டிகளில் டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் என பல அணிகளுக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்தோரின் பட்டியலிலும் அவர் இடம் பெற்று உள்ளார்.












Click it and Unblock the Notifications