டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Social Distancing, Quarantine, Isolation, Lock Down, Curfew- இதற்கான வித்தியாசங்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வந்தாலும் வந்தது, அரசு சொல்லும் வார்த்தைகளான தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தனிமைப்படுத்துதல், லாக்டவுன், ஊரடங்கு, சமூக விலகல் ஆகிய பாதுகாப்பு நடைமுறைகள் நம்மை கன்பியூஸ் செய்கின்றன.

Recommended Video

    Social Distancing ஏன் எதற்கு தேவைப்படுகிறது?

    கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 11ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். தம்மாதுண்டு வைரஸ் உலக நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றன.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் மிக முக்கியமானவை தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், லாக்டவுன், ஊரடங்கு, சமூக விலகல் ஆகும். இந்த செய்தியில் இவற்றுக்கான வித்தியாசங்களை காண்போம். இவை அனைத்துமே பிரிவு என ஒருவகை அர்த்தத்தை கொண்டிருந்தாலும் இவை எந்த வகையில் வேறுப்படுத்துகின்றன என்பதை பார்ப்போம்.

     ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா.. என்ன? ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா.. என்ன?

     சமூக விலகல் என்றால் என்ன?

    சமூக விலகல் என்றால் என்ன?

    சமூக விலகல் என்றால் என்ன? மற்றவர்களுடனான அதாவது தொடுதல், அருகில் செல்லுதல் உள்ளிட்ட உடல் தொடர்புகளை குறைக்கும் ஒரு நடைமுறையாகும். சுகாதாரத் துறை அதிகாரிகள் குறைந்தது 6 அடி இடைவெளியையாவது கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இந்த நடைமுறையில் கீழ்கண்டவை அடங்கும்.

    • எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சமூக தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

      எந்த குழுவினருடனும் உரையாட கூடாது
    • இசைக் கச்சேரி, விளையாட்டு நிகழ்ச்சிகள், மத ரீதியிலான விழாக்களுக்கு செல்லக் கூடாது.
    • அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்
    • பள்ளிகளை மூடுதல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிலேயே படிக்க வேண்டும்.
    • நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் மளிகை பொருட்களை வாங்கினாலும் 6 அடி தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
    • கைகுலுக்கலை விட்டுவிட்டு வணக்கம் என கூற வேண்டும்.
    • சமூக விலகல் என்பது எந்நேரமும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது அல்ல. மளிகை பொருட்கள் வாங்க செல்லலாம், நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் குரூப் குரூப்பாக நின்று பேசுதல் கூடாது, மற்றவர்களிடம் இருந்து 6 அடி தூரம் விலகியே இருக்க வேண்டும்.

     தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்ன

    தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்ன

    தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்ன? சமூக விலகலை விட சற்று மோசமானதாகும். யாருக்கேனும் கோவிட் 19 வைரஸ் சோதனை செய்யப்பட்டு பாதிப்பு உறுதியானால் அவர்கள் மக்களுடன் எந்த தொடர்புமின்றி தனித்து வைக்கப்படுவர். வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு அறிகுறிகள் தெரிய 14 நாட்கள் ஆகும் என்பதால் அத்தனை நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்த முறையில் கீழ்க்கண்டவை அடங்கும்.

    • மருத்துவ அவசரம் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
    • பொது இடங்களுக்கு செல்ல கூடாது, பொது போக்குவரத்துகளை பயன்படுத்தக் கூடாது.

      மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல் அறிகுறிகள் கொண்டவர்கள் கண்காணிக்கப்படுவர்.
    • கைகளை சோப்பு போட்டு தண்ணீரால் அவ்வப்போது கழுவ வேண்டும்.
    • வீடுகளை தினந்தோறும் பெருக்கி, துடைக்க வேண்டும்.
    • தேவையானவை எது வேண்டுமானாலும் வீட்டுக்கே வரவழைக்க வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
    • தனித்து இருக்க வேண்டும், முடிந்தால் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
    • இந்த நடைமுறையை அரசு பிறப்பிக்கும். இதை சம்பந்தப்பட்டவர்கள் மீறக் கூடாது.
     பாதுகாப்பு நடைமுறை

    பாதுகாப்பு நடைமுறை

    தனிமைப்படுத்துதல் என்றால் என்ன? இந்த நடைமுறை பெரும்பாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு அறிவுறுத்தப்படும். இந்த நடைமுறைகளில் கொரோன பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் மட்டுமே நோயாளிகளுடன் இருப்பர். அவர்கள் தங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க உடல் கவசம், முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வர். இந்த நடைமுறையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தோரும், வெளிநாட்டு பயணம் செய்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தாலும் பின்பற்றப்படும்.

    • இந்த நடைமுறையில் மருத்துவமனை அல்லது தனிப்பட்ட பகுதியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
    • நோயாளியை சுற்றி இருப்பவர்களும் மாஸ்க் அணிந்து கொள்வர்.
    • யாரையும் தொடக் கூடாது
    • தனி உடைமைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல்
    • எப்போதும் சோப்பு போட்டு 20 வினாடிகளுக்கு கைக் கழுவ வேண்டும்.
     மக்கள் நடமாட்டம் முடக்கம்

    மக்கள் நடமாட்டம் முடக்கம்

    லாக் டவுன் என்றால் என்ன? மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவது லாக் டவுன் ஆகும். இதன் மூலம் கோவிட் 19 பரவுதலை தடுப்பது. இது மக்களால் எடுக்கப்படும் முடிவு இல்லை. முற்றிலும் அரசு செயல்படுத்தும் நடைமுறையாகும். இந்த நடைமுறையின் போது என்னென்ன நடக்கும்

    • ரயில், விமானம் மற்றும் பொது போக்குவரத்துகள் இயங்காது
    • உணவகங்கள், தியேட்டர்கள் மூடப்படும்
    • கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிய மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
     ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன? நாடுகளுக்கு நாடு இதன் அர்த்தம் மாறுபடும். இது பெரும்பாலும் அரசு விதிக்கும் உத்தரவே ஆகும். அரசு கூறும் குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருத்தல் ஆகும். இந்த நடைமுறையில் என்னென்ன அடங்கும்? ஜனதா ஊடரங்கு என்றால் நாடு முழுவதும் ஊடரங்கு என்பதாகும்.

    • மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது
    • அரசின் உத்தரவை மீறினால் அபராத வசூலும் கைது நடவடிக்கையும் ஏற்படும்.

    English summary
    What are Social Distancing, Quarantine, Isolation, Lock Down, Curfew? and also its differences.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X