மக்களே! உடலுறவில் வேகம் வேண்டாம்.. அந்த நேரத்தில் இதை கண்டிப்பா செய்யணும்! மருத்துவர்கள் அட்வைஸ்
டெல்லி: மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனிடையே இது குறித்த ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த நவீன உலகில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை பிரச்சினை குறித்த ஆய்வுகளும் கூட உலகெங்கும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரிட்டனை சேர்ந்த ஷெஃபீல்டு பல்கலைக்கழக மருத்துவர்கள் குழந்தையின்மை பிரச்சினை குறித்த ஆய்வு நடத்தினர். அதில் அவர்கள் கண்டுபிடித்த சில முக்கிய விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியம் தருபவையாகவே உள்ளது.

கர்ப்பம்
இப்போது நாம் அவசரக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றே சொல்லாம். காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது முதல் இரவு களைத்துப்போய் தூங்க செல்வது வரை வரை எல்லாமே இப்போது அவசர அவசரமாகவே நடந்து வருகிறது. படுக்கையில் உடலுறவின் போது கூட நீண்ட நேரம் ஈடுபடும் வழக்கம் மாறி, குறுகிய நேரத்திற்கு அவசரமாக உடலுறவு கொள்ளும் முறை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதை அவர்கள் 'quickies' என்று குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வின் படி, இப்படி அவசர அவசரமாக விரைவாக செக்ஸ் வைத்துக் கொள்வது கர்ப்பமடையும் வாய்ப்புகளைக் குறைகிறது தெரிய வந்துள்ளது.

ஆய்வு முடிவுகள்
இந்த ஆய்வு குறித்த முடிவுகள் Reproductive Biology and Endocrinology என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 63 விந்தணு நன்கொடையாளர்களை அளித்த விந்தணுக்களை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆபாசப் படங்களை ஆண்கள் பார்க்கும் போது விந்தணு எண்ணிக்கை 58 சதவீதம் அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சாதாரண ஆபாசப் படங்களில் வெறுமன பார்ப்பது போன்ற உணர்வே அவர்களுக்கு இருக்கும். எனவே, அப்போது விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கூடுதல் விந்தணுக்கள்
அதேநேரம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆபாசப் படங்களைப் பார்க்கும் போது, ஆண்களுக்கு அதில் ஈடுபடுவது போன்ற உணர்வை ஏற்படுவதாகவும் இதனால் விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சில ஆய்வுகளில் கருவுறுதல் குறித்தும் சில முக்கிய விஷயங்களைக் கண்டறிந்துள்ளனர். அதாவது ஆபாசப் படங்களைப் பார்த்து 14 மணி நேரத்திற்கு ஆண்களுக்கு விந்தணு வெளியேறவில்லை என்றால், அவர்கள் 33 மில்லியன் கூடுதல் விந்தணுக்களை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வல்லுநர்கள் பரிந்துரை
எனவே ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை என்பது தம்பதியருக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. கர்ப்பம் தரிப்பது என்பது பெண் கருமுட்டை வெளிவரும் மாதத்தின் நாளில் விரைவாக செக்ஸ் வைத்துக் கொண்டால் கருவுறும் வாய்ப்புகள் குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆண்கள் அதிகம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் போது தான், கருத்தரிப்பதற்குச் சிறந்த விந்தணு மாதிரிகளை உருவாக்குகிறார்கள் என்பது இதில் தெளிவாகிறது. இதுவரை நடந்த ஆய்வுகளிலும் அதுவே தெரிய வந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்
மேலும், சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதன் மூலம் குழந்தையைக் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கமுடியும். முதலில் துரித உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். டிரான்ஸ் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்தவும். மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

உடலுறவு
மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள். அதேபோல உடல் பருமனும் கூட குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, உடற்பயிற்சி மற்றும் முறையான உணவுப் பழக்கம் மூலம் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.. அனைத்தையும்விட முக்கியமாக தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபட வேண்டும். அதிலும் குறிப்பா ovulation நேரத்தில் உடலுறவில் ஈடுபட வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications