காய்ச்சல் இல்லையா? மறுபடி டெஸ்ட் வேண்டாம்! வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு புது ரூஸ்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை பாடாய்படுத்தி வரும் நிலையில் இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,300-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஓமிக்ரான் காரணமாக நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அபாய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை பின்வருமாறு காண்போம்.

What does the new rules of Covid 19 self-isolation rule

சுய தனிமைப்படுத்தல் என்றால் என்ன?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் ஒரேடியாக குவிவதை தடுக்க அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி உடல்நிலையை கவனித்து சிகிச்சை [பெற்று கொள்வதே சுய தனிமைப்படுத்தல். இந்த சுய-தனிமைக் காலம் தற்போது 1 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:

* தனி கழிப்பறை வசதியுடன் கூடிய நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் தங்குவது நல்லது. மற்றொரு குடும்ப உறுப்பினர் அதே அறையில் தங்க வேண்டும் என்றால், இருவருக்கும் இடையில் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியை பராமரிப்பது நல்லது.

* தங்கள் குடும்பத்தில் உள்ள வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

* தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வீட்டுக்குள்ளும் நடமாட்டத்தை குறைக்க வேண்டும்

* எந்தச் சூழ்நிலையிலும் திருமணம், துக்க நிகழ்வுகளிலும், சமூக/மதக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்:

* சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை நன்கு கழுவவும்

* டம்ளர்கள், கோப்பைகள், உணவு உண்ணும் பாத்திரங்கள், தட்டுகள், துண்டுகள், படுக்கை அல்லது பிற பொருட்களை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர கூடாது.

* எப்பொழுதும் மாஸ்க் அணியுங்கள். ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாஸ்க்கை அப்புறப்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்குகளை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

* வீட்டு தனிமையின்போது நோயாளிகள் / பராமரிப்பாளர்கள் / நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளை சாதாரண ப்ளீச் கரைசல் (5%) அல்லது சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் (1%) பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்து பின்னர் எரித்து அல்லது ஆழமாக புதைத்து அப்புறப்படுத்த வேண்டும்.

* பயன்படுத்திய மாஸ்க்குகள் எப்போதும் தொற்று ஏற்படக்கூடியதாகக் கருதப்பட வேண்டும்

* வீட்டு தனிமையில் இருப்பவர்கள் இருமல்/காய்ச்சல்/சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் அல்லது 011-23978046 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

தற்போது வீட்டு தனிமையில் என்ன மாறிவிட்டது?

* வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லையென்றால் 7 நாடுகளுக்கு பிறகு தனிமையில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு மீண்டும் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+