மாரடைப்பு தெரியும்.. அதென்ன சைலண்ட் ஹார்ட் அட்டாக்! இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர் கிட்ட போங்க
டெல்லி: ஹார்ட் அட்டாக் என்றால் நமக்குத் தெரியும்.. ஆனால் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் இங்குப் பலருக்கும் என்ன என்பது தெரிவதில்லை. அதன் அறிகுறிகளைப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி பேர் வரை மாரடைப்பு காரணமாகப் பரிதாபமாக தங்கள் உயிரை இழக்கின்றனர். புனித் ராஜ்குமார் தொடங்கிப் பல பிரபலங்களும் கூட மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்படும் ஒருவருக்குத் தக்க நேரத்தில் சிகிச்சை தரவில்லை என்றால் அவர்களைக் காப்பாற்றுவதே கடினம். மாரடைப்பு ஏற்படும் பலருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாக உள்ளது.
35 வயது வேலைக்கார பெண் வீட்டு கட்டிலில் ஹார்ட் அட்டாக்.. பரிதாபமாக பலியான 67 வயது மாஜி அரசு அதிகாரி

சைலண்ட் ஹார்ட் அட்டாக்
ஹார்ட் அட்டாக் (heart attack) எனப்படும் இந்த மாரடைப்பு குறித்து இப்போது ஓரளவுக்கு விழிப்புணர்வுகள் உள்ளன. இதயத்தில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், பலவீனமாக உணர்வது உள்ளிட்டவை இந்த மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது. அதேநேரம் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன என இங்குப் பலருக்கும் தெரிவதில்லை. இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்காலும் கூட ஒவ்வொரு ஆண்டும் நாம் பலரையும் இழக்கும் சூழல் உருவாகிறது. இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தக்க நேரத்தில் சிகிச்சை
மாரடைப்பு ஏற்படும் நெஞ்சு பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் பொதுவாக ஏற்படும். ஆனால், இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் இதுபோல எந்தவொரு அறிகுறியும் தென்படாது. இதுதான் இதில் இருக்கும் ஆபத்தான விஷயம். சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் நபருக்கு தங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதே தெரியாது என்பதால் அவர்களால் தக்க நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. இது தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக். இது அதிக பேரைக் கொல்லும் விஷயமாக மாறியிருக்கிறது.

லைட்டான அறிகுறி
இதயத்திற்குச் செல்லும் ரத்தம் தடுத்து நிறுத்தப்படுவதால் தான் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. தமனிகள், ரத்தக்குழாய்களில் கொழுப்புக் கட்டியாக மாறுவதில் இதுபோன்ற அடைப்புகள் ஏற்படுகிறது. சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிலும் இதேதான் நடக்கும். ஆனால், சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவோருக்கு மிக லைட்டான அறிகுறி மட்டுமே இருக்கும். சிலருக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கூட இருக்கலாம். பொதுவாக சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் பலரும் அதை நெஞ்செரிச்சல், காய்ச்சல் காரணமாக ஏற்படும் எரிச்சல் என்றே நினைத்துக் கொள்கிறார்கள்.

மாரடைப்பு
மாரடைப்பு ஏற்படும் போது அதிகம் வியர்வை வெளியேறும். இதுதான் எப்போதும் முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படும். ஆனால், இந்த அறிகுறி கூட சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் இருக்காது. எனவே, இது தொடர்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு மிக லைட்டான அறிகுறிகளே இருக்கும் என்பதால், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவர்களிடம் செல்வது சிறப்பு.
அறிகுறிகள் என்ன
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் லைட்டாக இருந்தாலும் கூட உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்:

தலை சுற்றல் மற்றும் மயக்கம்
மார்பில் அழுத்தம் அல்லது லைட்டான வலி- பொதுவாக மாரடைப்பின் போது வலி அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் வலி மிகவும் குறைவாகவே இருக்கும்
கைகள், மார்பு, கழுத்து, தோள்கள் வலி உணர்வு இருக்கும்
குளிர் வியர்வை மற்றும் குமட்டல் ஏற்படலாம்

ஆண்களே ஜாக்கிரதை
மாரடைப்பு மற்றும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் பொதுவாக ஆண்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். அதேநேரம் மாரடைப்பு ஏற்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் பெண்கள் உயிரிழக்க 58 சதவீதம் அதிகம். அதேநேரம் மாரடைப்பு இல்லாத ஆண்களுடன் ஒப்பிடும்போது சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் ஆண்கள் உயிரிழக்க 23 சதவீதம் மட்டுமே வாய்ப்புகள் உள்ளது.