பர்சை தூக்கிப் போடுங்க.. டிஜிட்டல் ரூபாயில் இவ்வளவு பயன்களா? யூஸ் பன்றது எப்படி? விலைக்கு வாங்கலாமா?
டெல்லி: இன்று இந்திய ரிசர்வ் வங்கி சோதனை முறையில் அறிமுகம் செய்து இருக்கும் டிஜிட்டல் ரூபாயையை எப்படி பயன்படுத்துவது? அதன் பயன்கள் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. அதன்படி டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்து இருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐடி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, பாப், கோடக், இந்திய யூனியன் வங்கி ஆகிய 8 வங்கிகளில் குறிப்பிட்ட நகரங்களில் இந்த டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
15 நொடிக்கு ஒரு ஏசி மெஷின் தேவைப்படும்.. இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் வெப்பம்.. உலக வங்கி பகீர்

எப்படி வாங்குவது?
டிஜிட்டல் ரூபாய் என்பது விலை கொடுத்து வாங்கக்கூடியது அல்ல. எப்படி நம் கையில் இருக்கும் காகித நோட்டை விலை கொடுத்து வாங்க முடியாதோ அதே போன்று டிஜிட்டல் ரூபாயையும் வாங்க முடியாது. ஒரு பொருளையோ, சேவையையோ காகித ரூபாய் கொடுத்து பெறுவதை போன்று டிஜிட்டல் ரூபாயை செலுத்தி பொருள், சேவையை பெற முடியும்.

ஏன் டிஜிட்டல் ரூபாய்?
ரிசர்வ் வங்கி இந்த டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்வதற்கான காரணம், நாணயத்தில் காகிதம் மற்றும் உலோக பயன்பாட்டை குறைப்பதுதான். காரணம் நாணயத்தை அச்சிடுவதில் காகிதம் மற்றும் உலோகத்தின் தேவை அதிகம் உள்ளது. அதேபோல் அதை தயாரிப்பதற்கான செலவும், பராமரிப்பு செலவும் மிகுதியாக இருக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?
தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள டிஜிட்டல் ரூபாயை மொபைல் போன்கள் மூலமாக அனுப்பிக்கொள்ளலாம். ஒரு நபர் மற்றொரு நபருக்கும், ஒரு நபர் வியாபாரிக்கும் இந்த டிஜிட்டல் பணத்தை அனுப்ப முடியும். இதுபோல் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்துவதற்கு இணையதள இணைப்பு தேவை இல்லை.

செலவு மிச்சம்
ஆனால், டிஜிட்டல் ரூபாயின் வடிவம் எப்படி இருக்கும் என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை. ரூபாய் நோட்டு மற்றும் காயின்களை தயாரிப்பதற்கும் அதனை வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் ஆகும் செலவை கட்டுப்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கமாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார குற்றங்கள்
அதே நேரம் இந்த காகித மற்றும் உலோக நாணயங்கள் எளிதில் சேதமடைந்து விடுவதால் அதனை குறிப்பிட்டு கால இடைவெளிக்குள் மாற்றிக்கொடுக்க வேண்டிய அவசியமும் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. டிஜிட்டல் ரூபாய் மூலமாக இந்த சிக்கல்கள் களையப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. அத்துடன் பொருளாதார குற்றங்களையும் இதன் மூலம் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

எப்படி இருக்கும்?
டிஜிட்டல் வாலட்டுகள், மொபைல் போன்கள், இதர எலெக்டிரானிக் தொலைதொடர்பு கருவிகளின் மூலமாக டிஜிட்டல் ரூபாயை கையாள முடியும். எப்படி வழக்கமான உலோகம் மற்றும் காகித நாணயங்கள் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2000 என்ற மதிப்பில் வெளியிடப்படுகிறதோ அதே மதிப்பில்தான் டிஜிட்டல் ரூபாயும் வெளியிடப்பட உள்ளது.

வட்டி இல்லை
யுபிஐ ஐடி மற்றும் கியூ ஆர் கோட் மூலமாக இந்த டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த நம்மால் முடியும். இவ்வாறு வாலட்டில் சேர்க்கப்படும் டிஜிட்டல் ரூபாய்க்கு வட்டி கிடையாது. சாதாரணமாக நாம் வைத்திருக்கும் உலோக, காகித ரூபாய்க்கு எப்படி வட்டி என்பது இருக்காதோ, அதேபோன்றுதான் டிஜிட்டல் ரூபாயும் இருக்கும்.