Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெரிய கும்பிடு.." வாய்விட்டு சிரித்த ராகுல் காந்தி! கேள்வியை மறந்த செய்தியாளர்! பிரஸ் மீட்டில் கலகல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது டெல்லியில் பாத யாத்திரை சென்று வருகிறார். இன்று டெல்லியில் பிரஸ் மீட்டில் செய்தியாளர் கேட்ட ஒரு கேள்வியால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது. ராகுல் காந்தியே ஒரு கட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு போதும் எனப் பதிலளித்தார்.

ராகுல் காந்தி இப்போது இந்தியா முழுக்க பாத யாத்திரை சென்று வருகிறார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி அவர் இந்த பாத யாத்திரையைக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பாத யாத்திரைகளில் இதுதான் மிகப் பெரியது. இந்த பாத யாத்திரைக்குப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 பாத யாத்திரை

பாத யாத்திரை

இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் தான் கமல்ஹாசன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டிருந்தார். அதேபோல பொருளாதார வல்லுநரும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரகுராம் ராஜன் தொடங்கி பலரும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். நாட்டு மக்களிடையே வேற்றுமை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வதாகவே பலரும் கூறி வருகின்றனர்.

 பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

இப்போது ராகுல் காந்தி டெல்லியில் பாத யாத்திரை சென்று வருகிறார். டெல்லியில் பாத யாத்திரையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் டெல்லி போலீசார் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களே ராகுலைச் சுற்றிப் பாதுகாப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்திற்குக் காங்கிரஸ் கடிதம் எழுதியது. இதற்குப் பதிலளித்த டெல்லி போலீசார், போதிய பாதுகாப்பு குளறுபடிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மேலும், ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் காவலர்களின் அறிவுறுத்தலை மீறி வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, டெல்லி போலீசை நக்கலடித்திருந்தார். புல்ட் ப்ரூப் காரில் பாத யாத்திரை செல்ல முடியாது என்ற அவர், பாஜக அரசு பாத யாத்திரையைக் கண்டு அஞ்சுவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது டெல்லி குளிரில் வெறும் டீசர்ட் உடன் நடப்பது எப்படி என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தியே வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.

 பிரஸ் மீட்டில் கலகல

பிரஸ் மீட்டில் கலகல

டெல்லியில் எப்போதும் இந்த மாதங்களில் கடுங்குளிர் இருக்கும். அதுவும் இந்தாண்டு வழக்கத்தைக் காட்டிலும் குளிர் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு அனைவருமே இறுக்கமான ஆடைகள், ஸ்வெட்டர்கள் அணிந்துதான் வீட்டை விட்டே வெளியே வருவார்கள். ஆனால், ராகுல் காந்தி வெறும் டீ சர்ட், பேண்ட் உடன்தான் வலம் வருவது இணையத்தில் ட்ரெண்டாது. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் தான் ராகுல் காந்தி வாய்விட்டுச் சிரித்தார்.

 மறந்த செய்தியாளர்

மறந்த செய்தியாளர்

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "எனது டீசர்ட் மீது உங்களுக்கு என்ன இவ்வளவு ஆர்வம். இதில் என்ன பிரச்சினை. நான் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா. கவலை வேண்டாம். இந்த யாத்திரை முடிந்த உடன்.. கடும் குளிரில் டீ சர்ட் மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்வது எப்படி என வீடியோ ஒன்றை வெளியிடுகிறேன்" என்று கூறி சிரித்தார். அதன் பிறகு அந்த செய்தியாளரைப் பார்த்து, "சரி... உங்கள் கேள்வி தான் என்ன?" என்று கேட்டார். இந்த களேபரத்தால் ஸ்டன் ஆன செய்தியாளர் ஒரு நிமிடம் என்ன பேச வந்தேன் என்பதையே மறந்துவிட்டார்.

 பெரிய கும்பிடு

பெரிய கும்பிடு

அதன் பிறகு ஒருவாறு சமாளித்து மீண்டும் குளிர் ஸ்வெட்டர் என ஆரம்பிக்க, ராகுல் காந்தி மீண்டும் வாய்விட்டுச் சிரித்தார். அதன் பிறகு ஒரு பெரிய கும்பிடு போட்டு, ரொம்ப நன்றி எனக் கூறிவிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இப்போது குளிர் எதுவும் தெரியவில்லை. இதனால் நான் ஸ்வெட்டர் எதுவும் போடவில்லை. எனக்குக் குளிர் அடிக்க தொடங்கினால் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன். ரொம்ப கவலைப்பட வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+