டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார், யாருக்கு தடுப்பூசி தேவை? யாருக்கு தேவையில்லை? மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை.. முழு ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: தற்போது யார், யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்? என்ற பரிந்துரையை மத்திய அரசிடம் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

    Russia-வின் Sputnik Light Corona Vaccine எப்படி? | Single Dose Corona vaccine | Oneindia Tamil

    கொரோனாவை தடுக்க நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசிகள்தான். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

    கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்னும் இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

    மும்பை தனியார் மருத்துவமனைகளில் குவிந்துள்ள தடுப்பூசி.. மாநகராட்சியிடமிருப்பதை விட 4 மடங்கு அதிகம் மும்பை தனியார் மருத்துவமனைகளில் குவிந்துள்ள தடுப்பூசி.. மாநகராட்சியிடமிருப்பதை விட 4 மடங்கு அதிகம்

    தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி பற்றாக்குறை

    கொரோனா முதல் அலையில் அண்டை மாநிலங்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளை வாரி, வாரி வழங்கிய இந்தியாவில் தற்போது கடும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்ட நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் பல மாநிலத்தில் தொடங்கவில்லை.

    மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

    மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

    இந்த நிலையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஆர்வத்தை விட நோய் தொற்றால் பாதிப்பட்டவர்கள். மிகுந்த ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய பொது சுகாதார சங்கம் (ஐபிஹெச்ஏ), இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (ஐஏபிஎஸ்எம்) மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (ஐஏஇ) ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்கள் இது தொடர்பான பரிந்துரை அடங்கிய அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது

    தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது

    தடுப்பூசி என்பது கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். மேலும் அனைத்து வலுவான ஆயுதங்களையும் போலவே இது நிறுத்தப்படவோ அல்லது கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படவோ கூடாது; ஆனால் செலவு குறைந்த வழியில் அதிகபட்ச நன்மைகளைப் பெற அதனை மூலோபாய ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    முதலில் யாருக்கு?

    முதலில் யாருக்கு?

    தடுப்பூசியை வகையின்றி அரைகுறையாக செலுத்தினால் அது உருமாறிய கொரோனா பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே கொரோனா நோய் தொற்று ஆளானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. நோய்க்கு பிறகு தடுப்பூசி பலன் தரும் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி போடலாம். தற்போதுள்ள நிலையில் கொரோனாவால் அதிக ஆபத்தில் உள்ளவர்கள், நோய் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கு முதலில் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.

    கூடுதல் செலவுகள்

    கூடுதல் செலவுகள்

    இளைஞர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால் அவர்கள் மீது அதிக கவன செலுத்த அவசியமில்லை. இளைஞர்கள் தடுப்பூசி போடுவது கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தலாம். தற்போது யாருக்கு தடுப்பூசி தேவை என்ற முடிவில் மத்திய அரசு தெளிவாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    Who should be vaccinated now and for whom? Medical experts have told the federal government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X