குதூப் மினாரை விட உயரம்! நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தை ஏன் இடிக்கிறாங்க தெரியுமா? டாப் 5 பாயிண்ட்
டெல்லி: டெல்லி குதூப்மினாரை விட உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இந்தியாவின் உயரமான இரட்டை கோபுர கட்டங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு வெடிவைத்து வெறும் 9 வினாடியில் தகர்க்கப்பட உள்ள நிலையில் இந்த கட்டத்தின் இடிப்புக்கான 5 முக்கிய பாயிண்டுகள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
டெல்லியில் உள்ள குதூப்மினார் கோபுரத்தை விட உயரமான கட்டடம் கட்ட ‛சூப்பர்டெக்' எனும் கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது. இந்த நிறுவனம் சார்பில் டெல்லியின் அருகே உள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏபெக்ஸ், சியான் எனும் பெயரில் 2 அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டன.
இந்த கட்டடங்கள் தலா 40 மாடிகள் கொண்டதாக உள்ளன. மொத்த உயரம் 320 அடியாகும். தற்போது இந்த கட்டடம் தான் இந்தியாவின் மிகப்பெரிய கட்டடம் என கூறப்படுகிறது. இந்த கட்டடம் தான் இன்று மதியம் 2.30 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது.

முக்கிய 5 பாயிண்ட்
இந்த இரட்டை கோபுரங்கள் இடிப்பின் பின்னணியில் 5 முக்கிய பாயிண்டுகள் உள்ளன. மேலும் 10 ஆண்டுகால சட்டப்போராட்டம் உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் உத்தரவுகளை தொடர்ந்தே இந்த இரட்டை கோபுர கட்டங்கள் இன்று இடித்து அகற்றப்பட உள்ளன. இந்த கட்டடம் கடந்து வந்த விஷயத்தை 5 பாயிண்டுகளாக அறிந்து கொள்ளலாம்.

முதல் பாயிண்ட்
2004ம் ஆண்டில் இந்த இரட்டை கோபுரம் கட்டட பணி துவங்கியது. 'சூப்பர்டெக்' நிறுவனத்துக்கு 9 தளங்கள் கொண்ட 14 தளங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பிறகு இந்த திட்டம் திருத்தப்பட்டது. இதையடுத்து தான் ஒவ்வொரு டவர்களிலும் 40 தளங்கள் வரை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்ற பிறகு தான் விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதான் இன்றைய கட்டட இடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

2வது பாயிண்ட்
கட்டடம் கட்டும்போதே முன்பணம் கொடுத்து பொதுமக்கள் பதிவு செய்தனர். கட்டடம் உயர உயர வரைபடத்துக்கும் கட்டுமானத்தின் வடிவத்துக்கும் வேறுபாடு இருந்தது. மேலும் நொய்டா பகுதியின் தட்பவெப்பம் மற்றும் புவியில் அமைப்புக்கு எதிராக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் தான் கட்டட இடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது.

3வது பாயிண்ட்
அதன்பிறகு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 2012ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ல் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2021ல் ஆகஸ்ட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதோடு 3 மாதத்தில் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது.

4வது பாயிண்ட்
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 3 மாதத்துக்குள் கட்டடத்தை இடிக்க முடியவில்லை. உயரமான இந்த கட்டடத்தை பக்கத்தில் உள்ள பிற கட்டடங்களுக்கு பிரச்சனை இன்றி இடிக்க வேண்டும் என்பதால் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய சூழலால் இந்த காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று இந்த கட்டடம் வெடிவைத்து 9 வினாடிகள் இடித்து அகற்றப்பட உள்ளது.

5வது பாயிண்ட்
இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டை கோபுர கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது. இதற்கான செலவை நீதிமன்ற உத்தரவுப்படி ‛சூப்பர்டெக்' நிறுவனம் ஏற்க உள்ளார். கட்டட இடிப்பு பணியை நொய்டா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மும்பையை சேர்ந்த எடிபிக் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த இரட்டை கோபுர கட்டடத்தை சுற்றி ஏராளமான பில்டிங்குகள் உள்ளதால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டத்தை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது உள்ளது. கட்டத்தின் அனைத்து தளங்களிலும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. வெறும் 9 வினாடி முதல் 12 வினாடிக்குள் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த கட்டட இடிப்பு பணியானது ரூ.20 கோடி செலவில் இந்த கட்டங்கள் இடிக்கப்படுகிது
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications