டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்கும் நாளை? நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளில் ஒருவரான பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றததில் ஐந்து நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு நாளை (மார்ச் 3ம் தேதி) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
ஆனால் தண்டனை நாளை நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

ஏனெனில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் சிங் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தூக்கிலிடப்படுவதை நிறுத்தக் கோரி மற்றொரு மனுவை அக்‌ஷய் மற்றும் பவன் ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

மேலும் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் மனு மீதான தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. இந்த சிக்கல்கள் நிலுவையில் இருந்தால், மார்ச் 3 ம் தேதி தூக்கிலிடப்படுவது சாத்தியமில்லை என்று சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அக்சய் சிங் மனு

அக்சய் சிங் மனு

டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் அக்சய் சிங் தாக்கல் செய்த மனுவில், ஜனாதிபதிக்கு புதிய கருணை மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்யும் வரை தூக்கிலிட முடியாது.

கருணை மனு

கருணை மனு

மறுபுறம் பவன் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ததாகக் கூறினார். ஆனால் உச்ச நீதிமன்றம், பவன் குப்தாவின் சீராய்வு மனுவை மனுவை ஐந்து நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துவிட்டதால் இனி பவனின் கோரிக்கை பயனில்லாமல் போகும். மறுபுறம் பவன் குப்தா கருணை மனுவை இன்னமும் தாக்கல் செய்யவில்லை.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கருணை மனுவை தாக்கல் செய்ய பவன் குப்தாவுக்கு இப்போது வாய்ப்பு உள்ளது. அப்படி மனு போட்டால் அந்த மனுவை குடியரசுத்தலைவர் பரிசீலித்து உடனடியாக நிராகரித்தாலும் 15 நாட்களுக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. இதேபோல் பவன்குப்தா ஒருவேளை தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமனறத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம் பவனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போது தான் பவனின் இறுதி வாய்ப்புகள் முடியும்.

நாளை வாய்ப்பில்லை

நாளை வாய்ப்பில்லை

இதேபோல் தான் அக்சய் சிங்கின் இரண்டாவது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும். அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதையும் உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இது ஒருபுறம் எனில் விசாரணை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு நிர்பயா வழக்கில் நோட்டீஸ் இருக்கிறது. எனவே மேற்கண்ட காரணங்களால் நாளை தண்டனை நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை.

மூன்று முறை ஒத்திவைப்பு

மூன்று முறை ஒத்திவைப்பு

ஒரு வேளை மரண தண்டனை விசாரணை நீதிமன்றத்தால் இம்முறையும் ஒத்திவைக்கப்பட்டால் புதிய ஒரு மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவை சட்ட சிக்கல்களுக்கு பிறகு நீதிமன்றம் புதிததாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே மரண தண்டனை ஜனவரி 22, பிப்ரவரி 1ம் தேதி, மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளுக்கு மூன்று ஒத்திவைக்கப்பட்டது .

English summary
Will Nirbhaya case convicts hang tomorrow? Unlikely., some reson behind this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X