டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ, என்ஆர்சியை திரும்ப பெறுங்கள்.. 20 கட்சிகள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்.. காங்கிரஸ் அசத்தல்!

சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் மத்திய அரசு செயல்படுத்த கூடாது, உடனே திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் மத்திய அரசு செயல்படுத்த கூடாது, உடனே திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஏஏவிற்கு எதிராக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 1.30 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதில் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது

எதாவது பல்கலை.க்கு சென்று மாணவர்களை சந்தியுங்கள்.. தைரியம் இருக்கிறதா? மோடிக்கு ராகுல் சவால்! எதாவது பல்கலை.க்கு சென்று மாணவர்களை சந்தியுங்கள்.. தைரியம் இருக்கிறதா? மோடிக்கு ராகுல் சவால்!

இல்லை

இல்லை

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

என்ன தீர்மானம்

என்ன தீர்மானம்

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டும் ஏழைகளை, மத ரீதியான சிறுபாண்மையினரை குறி வைக்கிறது. நாடு முழுக்க மத ரீதியான பிளவை கொண்டு வருகிறது.

திரும்ப பெறுங்கள்

திரும்ப பெறுங்கள்

அதனால் இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சிஏஏவை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு இனியும் யோசிக்க கூடாது. மக்கள் இடையே ஒற்றுமையை நிலைநிறுத்தும் வகையில் உடனடியாக மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில அரசு

மாநில அரசு

அதேபோல் மாநில அரசுகள் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை மேற்கொள்ள அரசுக்கு உதவி கூடாது. மாநில அரசு உதவி இன்றி இதை செய்ய முடியாது. அதனால் மாநில அரசுகள் இதற்கு ஆதரவு தர கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
Withdraw CAA and NRC, the resolution passed in Congress's opponents meet today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X