கொஞ்சம் ஏமாந்திருந்தால் உடலே பீஸ் பீஸாகியிருக்கும்.. பளார் என அறை விடணும்.. நெட்டிசன்கள் கடும் கோபம்
டெல்லி: ரயில் வரும் நேரத்தில் செல்போன் பேசிக் கொண்டே டிராக்கில் நடந்து சென்ற பெண் ரயிலில் சிக்கிய சம்பவத்தில் அந்த பெண்ணை பளார் என அறைந்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
எத்தனை விளம்பரப் படங்கள், அறிவிப்புகள் வந்தாலும் செல்போனில் அரட்டை அடிப்பது, யாருடனாவது பேசிக் கொண்டே செல்வது போன்ற செயல்களால் இவர்கள் ஆபத்தில் சிக்குவது இல்லாமல் மற்றவர்களையும் பலிகடா ஆக்குகிறார்கள்.
வாகனங்களை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசுவது , செல்போனில் பேசிக் கொண்டே சாலைகளை கடப்பது, ரயில் தண்டவாளங்களை கடப்பது என்ற செயல்களில் நிறைய பேர் ஈடுபடுகிறார்கள்.

வீடியோ
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ஒரு வீடியோ வெளியானது. அதில் பெண் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டே ரயில்வே டிராக்கில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ரயில் வருவதாக அறிவிப்பு வந்தது.

செல்போனில் பேச்சு
அந்த அறிவிப்பையும் கவனிக்காத அந்த பெண் செல்போனில் பேசிக் கொண்டே சென்றார். ரயில் வந்தது. உடன் செய்வதறியாது திகைத்த அந்த பெண் யோசிப்பதற்குள் ரயில் கடந்தது. இதனால் அங்கிருந்த ஒரு சிலர் அந்த பெண் பலியாகியிருக்கக் கூடும் என நினைத்தனர்.

அதிர்ச்சி
ஆனால் ரயில் போன பிறகு அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் தண்டவாளத்தின் நடுவே படுத்துக் கொண்டிருந்தார். முகத்தில் தன்னுடைய துப்பட்டாவால் போர்த்தி கொண்டிருந்தார். ரயில் கடந்தவுடன் அந்த பெண் எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக எழுந்து சென்றார்.

வைரல் வீடியோ
அப்போது செல்போனில் பேசியபடியே சென்றார் பாருங்கள், அங்கிருந்தவர்களுக்கு பகீரென வாரி போட்டது. செத்து பிழைத்தோம் என்ற உறுத்தலே இல்லாமல் செல்போனின் பேச்சை தொடர்ந்துக் கொண்டே பெண் செல்கிறாரே என அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர். இந்த வீடியோ வைரலானது.

கன்னத்தில் பளார் அறை
இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து கூறுகையில் நல்ல வேளை ரயிலின் அடிபாகத்தில் எதுவும் தொங்கி கொண்டிருக்கவில்லை. இருந்திருந்தால் அந்த பெண் கண்டம் துண்டமாக துண்டாக்கப்பட்டிருந்திருப்பார் என்கிறார் ஒரு நெட்டிசன். அது போல் இன்னொருவரோ அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என அறை விட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications