அதி தீவிர புயலாக மாறியது யாஸ்... ஆக்ரோஷமாக நாளை கரையைக் கடக்கும் - முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்
டெல்லி: கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் நாளைய தினம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி மாலையில் ஆக்ரோஷத்துடன் கரையை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவாகும் எனவும் அது குறிப்பிட்டு உள்ளது.
இந்த புயல் நாளை புதன்கிழமை நண்பகலில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே மிகவும் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது மணிக்கு 165 முதல் 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

ஆந்திராவில் கனமழை
புயலின் நகர்வு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. யாஸ் புயலின் நகர்வு காரணமாக வடக்கு கடலோர ஆந்திராவில் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒடிசா மேற்குவங்காளத்தில் மழை
நாளை 26ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும் போது ஜார்கிராம், மேதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் அதீத கனமழை பெய்யும். புருலியா, பங்குரா, பர்தமான், ஹவுரா, ஹுக்ளி, கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ், பிர்பம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாடியா, முர்ஷிதாபாத், டார்ஜிலிங் பகுதியில் கனமழை பெய்யும்.

எங்கெங்கு மழை
27ம் தேதி மால்டா, டார்ஜிலிங், தினஜ்பூர், கலிம்போங், ஜல்பைகுரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 27ம் தேதி பங்குரா, புருலியா, பர்தமான், பிர்பம், முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தயார் நிலையில் மீட்புக்குழு
இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர மாநிலங்கள் குறிப்பாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை மிரட்டி வரும் இந்த புயலை எதிர்கொள்வதற்கு மத்திய-மாநில அரசுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும் கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு என மத்திய பாதுகாப்பு நிறுவனங்களும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.
இந்த முன்னேற்பாடு பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

புயலை எதிர்கொள்ள ஆலோசனை
இதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தீவிர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அதன்படி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகள் மற்றும் அந்தமான் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நிவாரண முகாம்களில் தங்க வைப்பு
ஒடிசாவில் புயலால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கருதப்படும் 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பாலாசோர், பத்ராக், கேந்திரபாரா, ஜெகத்சிங்பூர், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

5 மாவட்டங்களில் தயார் நிலை
இந்த பணிகளை இன்று நண்பகலுக்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மாநில அரசு, இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாவட்டத்துக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் நியமித்து உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் புயல் மீட்பு பணிகளுக்காக 52 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர், 60 மாநில பேரிடர் மீட்புக்குழு, 175 தீயணைப்புக்குழு என பெரும்படையே களமிறக்கப்பட்டு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications