உங்கள் பொலிவான சருமத்தின் பின்னணி என்ன? ஹர்லின் தியோல் கேள்வியால் சிரித்த மோடி.. சுவாரசிய பதில்
டெல்லி: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து உலககோப்பையை அவரது கையில் கொடுத்து வாழ்த்து பெற்றனர். இந்த வேளையில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல், பிரதமர் மோடியிடம் கேட்ட கேள்வி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. பிரதமர் மோடியும் அந்த கேள்வியால் தனது முகத்தை மூடி சிரித்ததோடு, சில வினாடிகள் யோசித்து அவர் சொன்ன பதில் கவனம் பெற்றது.
மகளிருக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி நடந்தது.

அந்த போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட் செய்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலககோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது. இதையடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிரதமர் மோடியின் கையில் உலககோப்பையை கொடுத்து போட்டோ எடுத்து கொண்டனர். அதன்பிறகு வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது பேட்டிங் ஆல் ரவுண்டரான ஹர்லின் தியோல், பிரதமர் மோடியிடம் கேள்வி ஒன்றை கேட்டார். அதனை கேட்ட பிரதமர் மோடி தனது முகத்தை மறைத்து சில வினாடிகள் சிரித்தார். மேலும் அனைத்து வீராங்கனைகளும் கலகலவென சிரித்தனர். ஹர்லின் தியோல், பிரதமர் மோடியிடம், ‛‛ சார்.. நீங்கள் எப்போதும் பொலிவுடன் இருக்கிறீர்கள். தயவுசெய்து உங்களின் தினசரி ‛ஸ்கின்கேர்' பற்றி சொல்ல முடியுமா?'' என்ற கேள்வியை முன்வைத்தார்.
இந்த கேள்வியை கேட்டவுடன் தான் பிரதமர் மோடி உள்பட அங்கிருந்த அனைவரும் சத்தமாக சிரித்து விட்டனர். சில வினாடிகள் முகத்தை கையால் மறைத்தபடி சிரித்த மோடி, ‛‛நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை'' என்றார். அதற்கு அங்கிருந்தவர்களிடம் ஒருவர், ‛‛சார்,இது இந்த நாட்டின் மில்லியன் கணக்கான மக்களின் அன்பு'' என்று கூறினார்.
இதையடுத்து தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், ‛‛சார்.. நான் சாமாளிக்க வேண்டிய நபர்கள் இவர்கள் தான். இப்போது பாருங்கள் என் தலைமுடி வெள்ளை நிறமாகிவிட்டது'' என்றார். அதாவது வீராங்கனைகளை சமாளிக்க முயன்று தனது தலைமுடியின் நிறம் வெள்ளயைாகிவிட்டதாக அவர் கூறினார். இது இன்னும் அங்கிருந்தவர்களிடம் சிரிப்பை வரவழைத்தது.
When Harleen Deol asked PM Modi about his skincare routine —
— Yash Makwana (@Makwanatwit) November 6, 2025
Modi ji: “25 years of blessings — that’s the secret!” 😄
No SPF, only Sewa, Prarthana & Faith. 🙏🏻#PMModi #HarleenDeol #Delhi pic.twitter.com/iY1Y947RoJ
இதையடுத்து பிரதமர் மோடி, ‛‛நான் 25 ஆண்டுகளாக அரசின் தலைவராக செயல்பட்டு வருகிறேன். மக்களின் ஆசீர்வாதங்களே என்னை பிரகாசமாக வைத்திருக்கிறது'' என்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications