3வது புள்ளி.. தருமபுரியில் ‘பிக்’ மூவ்.. சொல்லியடித்த தலைமை - பழனியப்பனுக்கு பதவி கிடைத்த பின்னணி?
தருமபுரி : தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அமமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து ஓராண்டு கடந்த பின்னும் அமைதியாகக் காத்திருந்த பழனியப்பனுக்கு ஸ்வீட் நியூஸ் கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தொகுதிகள் அடங்கிய தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இன்பசேகரன் மாற்றப்பட்டு, அப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பழனியப்பன்.
திமுக-வில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் நிலையில், மூன்றாவது ஆளாக மா.செ ஆகியிருக்கிறார் பெ.பழனியப்பன்.

புதிய மாவட்ட செயலாளர்கள்
திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் நேற்று இரவு வெளியானது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்தப் பட்டியலை வெளியிட்டார். பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய புள்ளிகள்
முன்னர் அதிமுகவிலும் அதன்பிறகு தினகரனின் அமமுகவிலும் முக்கிய புள்ளிகளாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு திமுகவுக்கு வந்ததுமே முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் திமுகவில் சேர்ந்து 1 ஆண்டு கடந்த பின்னும் முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

சீனில் வந்த பழனியப்பன்
இந்நிலையில் தான் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. வேட்பாளராக களமிறங்கிய இரண்டு மாவட்ட செயலாளர்களும் தோல்வியைத் தழுவினர். இதனால், ஸ்டாலின், அங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முக்கிய புள்ளிகள் மீது குறிவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி பழனியப்பனை திமுகவிற்கு கொண்டு வந்தார்.

உள்ளே இழுத்து வந்த செந்தில்பாலாஜி
அமமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த பழனியப்பன் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்சியில் முக்கிய தலைவர்கள் இல்லை என்பதால், பழனியப்பன் திமுக பக்கம் வந்தால் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலிலும் தருமபுரி மாவட்டத்தில் நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதாக ரிப்போர்ட் தலைமைக்குச் சென்றது. அப்போதே மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனாலும், அமைதி காத்தார் முதல்வர் ஸ்டாலின்.

முன்பே வந்திருந்தால்
பழனியப்பன், திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். பழனியப்பன் சிறிது காலம் முன்பே திமுகவுக்கு வந்திருந்தால் தருமபுரியும் நமதாக இருந்திருக்கும் என்றார். அந்த அளவுக்கு தருமபுரியில் செல்வாக்கு மிகுந்த நபர் என்பதை ஸ்டாலினும் அடையாளம் கண்டிருந்தார்.

உடனே போஸ்டிங் இல்லை
முக ஸ்டாலின் நன்னம்பிக்கையைப் பெற்றிருந்தாலும், பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும் சோர்வடையாமல், கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டம் என தீவிரமாக செயல்பட்டு வந்தார். பழனியப்பனின் ஒவ்வொரு செயல்பாடுகளும், தலைமைக்கு பறந்து கொண்டே இருந்து.

அப்போதே முடிவாகிடுச்சு
இதற்கிடையே, கடந்த மே மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் பங்கேற்ற பட்டமளிப்பு விழா மேடையில் முனைவர் பட்டம் பெற்றார் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன். முனைவர் பட்டம் பெற்ற பழனியப்பனை மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அரசியலில் பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ள பழனியப்பனை வியந்து பாராட்டிய ஸ்டாலின், வெகுவாக இம்ப்ரஸ் ஆனதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு மா.செ பதவி உறுதி என்றே தகவல்கள் பரபரத்தன.

தருமபுரிக்கு குறி
நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து வட மாவட்டங்களில் வேலைகளில் இறங்கியிருக்கும் பாமக, தருமபுரியில் வேகம் காட்டி வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்தில் சமீபத்தில் 3 நாள் நடைபயணம் மேற்கொண்டார். பாமக அங்கு வேகமெடுத்துள்ள நிலையில், அதனைத் திறம்படச் சமாளிக்கவும், தருமபுரியை எம்.பி தேர்தலில் தட்டித் தூக்கவும் பழனியப்பனை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

செந்தில்குமார் & பழனியப்பன்
தருமபுரி கிழக்கு மா.செவாக பழனியப்பன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், கிழக்கு மீண்டும் தடங்கம் சுப்பிரமணிக்கே சென்றுள்ளது. மேற்கின் இன்பசேகனுக்கு பதிலாக பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி எம்.பியாக இருக்கும் செந்தில் குமாரும் மா.செ பதவிக்கான ரேஸில் இருப்பதாக கூறப்பட்டது. சிறப்பாகச் செயல்பட்டு வரும் எம்.பி என்றாலும், அவரது சமீபத்திய சில நடவடிக்கைகளை தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. லோக்கலில் நிர்வாகிகளும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என பொறுப்பு அமைச்சர் மூலம் சென்ற தகவலை அடுத்தே, ஏகமனதாக பழனியப்பன் மா.செவாக நியமிக்கப்பட்டார் என்கிறார்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications