தர்மபுரி தொகுதியில் வாக்கு சதவீதம் செம அதிகம்.. இது யாருக்கு சாதகம்?
தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதியில் ஒவ்வொரு முறையும் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்த முறை பாமக சார்பில் சவுமியா அன்புமணி நிற்கும் நிலையில், கடுமையான சவாலை திமுக, அதிமுக சந்திக்கும் என்றே பலரும் கூறிவருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் அதிகபட்ச வாக்குப்பதிவு என்பது தர்மபுரி தொகுதியில் தான் நடந்துள்ளது. தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிட்டுள்ளார். திமுக சார்பில் ஆ மணி களம் இறங்கி இருந்தார். அதிமுக சார்பில் அசோகன் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு இன்று காலை முதலே அதிகமாக நடந்த தொகுதி என்றால் தர்மபுரி லோக்சபா தொகுதி தான். தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. வன்னியர்கள் மிகுதியாக உள்ள தொகுதியில், வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இங்கு வாக்குப்பதிவு படித்தவர்கள் அதிகம் உள்ள சென்னையைவிட அதிகமாகும்.. வழக்கம் போல் படித்தவர்கள் மற்றும் பணக்காரர்கள் அதிகம் உள்ள சென்னையில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு தர்மபுரி தொகுதியில் தான் நடந்தள்ளது. மக்கள் பலர் ஆறு மணி வரை ஆர்வமுடன் வாக்களித்தார்கள். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 73. 5 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தபோது, 75.44% என்ற அளவுக்கு வாக்குப் பதிவாகியிருந்தது.
பொதுவாக தர்மபுரியில் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்த்தால், 2014 ம் ஆண்டு 81.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2019 தேர்தலிலும் 82.41% வாக்குகள் பதிவாகி இருந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 77.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் தர்மபுரி- 79.67% பாலக்கோடு- 87.33% பென்னாகரம் - 84.19% பாப்பிரெட்டிப்பட்டி-82.04% அரூர் (தனி) - 78.53% என பதிவாகி இருந்தது. எப்போதுமே வாக்குப்பதிவு தர்மபுரியில் அதிகமாகவே பதிவாகி உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் தர்மபுரி சட்டசபை தொகுதியில் பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார்.
லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 2009ல் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட தாமரைச்செல்வன் வெற்றி பெற்றார்.
2014ல் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். 2019ஐ பொறுத்தவரை அன்புமணி ராமதாஸை வீழ்த்தி திமுகவின் செந்தில் குமார் 5,74,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
வாக்கு சதவீதம் அதிகரிப்பு என்பது திமுக, பாமக இரண்டு கட்சிகளுக்கு கடந்த காலங்களில் சாதகமாக இருந்துள்ளது. எனவே இந்த முறை சௌமியா அன்புமணிக்கு சாதமாக இருக்குமா அல்லது திமுக வேட்பாளர் மணிக்கு சாதகமாக இருக்குமா அல்லது அதிமுக, நாதக வேட்பாளருக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய ஜூன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்,.
கள்ளக்குறிச்சிக்கு அடுத்து தருமபுரியில் இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆம்.. தமிழகத்திலேயே தருமபுரி 2வது இடத்தை பிடித்துள்ளது.
இதோ 6 மணி நிலவரம்:கள்ளக்குறிச்சி 75.67%;தருமபுரி 75.44%; சிதம்பரம் 74.87%; பெரம்பலூர் 74.46%; நாமக்கல் 74.29%; கரூர்- 74.05%; அரக்கோணம் 73.92%; ஆரணி 73.77%; சேலம் 73.55%; விழுப்புரம் 73.49%; திருவண்ணாமலை 73.35%
வேலூர் 73.04%; காஞ்சிபுரம் 72.99%; கிருஷ்ணகிரி 72.96%.
கடலூர் 72.40%; விருதுநகர் 72.29%; பொள்ளாச்சி 72.22%; நாகப்பட்டினம் 72.21%.
திருப்பூர் 72.02%; திருவள்ளூர்- 71.87%; தேனி 71.74%; மயிலாடுதுறை 71.45%; ஈரோடு 71.42%.
திண்டுக்கல் 71.37%; திருச்சி 71.20%; கோவை 71.17%; நீலகிரி 71.07%; தென்காசி 71.06%.
சிவகங்கை 71.05%; ராமநாதபுரம் 71.05% ; தூத்துக்குடி 70.93%; நெல்லை 70.46%.
கன்னியாகுமரி 70.15%; தஞ்சாவூர் 69.82%; ஸ்ரீபெரும்புதூர் 69.79%; வடசென்னை 69.26%; மதுரை 68.98%; தென்சென்னை 67.82%; மத்திய சென்னை 67.35%.
தமிழ்நாட்டின் மொத்த வாக்குப் பதிவு (இரவு 7 மணி வரை) 72.09%
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications