தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’யகோபாவின் சாட்சி’ கடவுளுக்கு மட்டும் மரியாதை! தேசிய கொடி ஏற்ற முடியாது! அதிர வைத்த தலைமை ஆசிரியை!

Google Oneindia Tamil News

தருமபுரி : தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ’யகோபாவின் சாட்சி’ கடவுளுக்கு மட்டும் மரியாதை! தேசிய கொடி ஏற்ற முடியாது! அதிர வைத்த தலைமை ஆசிரியை!

    இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கப்பட்ட நிலையில், வழக்கமான உற்சாகத்தோடு நேற்று கொண்டாடப்பட்டது.

    அந்த வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

     கழிவுநீரை குடித்து கிராமத்தின் அவலத்தை சுட்டிகாட்டிய இளைஞர்... தருமபுரி அருகே விபரீத போராட்டம்! கழிவுநீரை குடித்து கிராமத்தின் அவலத்தை சுட்டிகாட்டிய இளைஞர்... தருமபுரி அருகே விபரீத போராட்டம்!

    தேசியக்கொடி

    தேசியக்கொடி

    இந்நிலையில் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவரே, தேசியக்கொடியினை ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

     சர்ச்சை

    சர்ச்சை

    இது தொடர்பான வீடியாக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக தொடங்கியுள்ளது. சுதந்திர தினவிழா நாடெங்கிலும் விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, தேசியக்கொடியை பள்ளியின் தலமை ஆசிரியை ஏற்ற மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     யகோபாவின் சாட்சி

    யகோபாவின் சாட்சி

    இதனை தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஆசிரியரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இது குறித்து சம்மந்தபட்ட தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது தான், யகோபாவின் சாட்சி என்ற கிருஸ்த்துவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும், தாங்கள் தங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், தங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே என கூறியுள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    மேலும் தேசத்துக்கும், தேசியக்கொடிக்கும் மரியாதை தருகிறோம், குறிப்பாக தேசியக்கொடியை அவமதிக்கவில்லை, இந்த பள்ளியில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிவதாகவும், நான்கு ஆண்டுகளுமே தான் தேசியக்கொடியை ஏற்றவில்லை பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்களால் தேசியக்கொடி ஏற்றபட்டது என தெரிவித்திருக்கிறார். அரசு பள்ளியின் தலமை ஆசரியை ஒருவர் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றபடாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Officials are investigating the government school headmistress who refused to hoist the national flag at the Independence Day ceremony near Dharmapuri ; தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை குறித்து அதிகாரிகள் விசாரணை
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X