தட்டித் தூக்குது தமிழ்நாடு அரசு..ஆதார் கார்டு போதும்! 75000 தர்றாங்க.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தோட்டக் கலைப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தோட்டக் கலைப் பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் துறை மட்டுமல்லாது தோட்டக்கலை பயிர்கள் துறை, மலைப் பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பிலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம், பாசன குளம் அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோட்டக் கலைப் பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்கள் 1,10,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, இதர காய்கறிகள், மலர்கள், கண்வலிக்கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பலதரப்பட்ட தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த நீரில் அதிக மகசூலை பெறும் நோக்கில் இத்திட்டம் அனைத்து வட்டாரத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். 2025-26-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,747 ஹெக்டர் பரப்பளவிற்கு ரூ.37.63 கோடி நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு துணை நிற்கும் செயல்பாடுகளான பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு அல்லது குழாய்கிணறு அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.25,000-க்கு மிகாமலும், டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் நிறுவதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.15,000-க்கு மிகாமலும், பாசனக்குழாய்களை நிறுவுதல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.10,000-க்கு மிகாமலும், பண்ணைக்குட்டை அமைத்தல் இனத்தில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.75,000-க்கு மிகாமலும் நுண்ணீர் பாசனத்திற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், (3.5X4.5 cm) அளவுள்ள பாஸ்போர்ட் போட்டோ-2 ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கைலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் அல்லது MIMIS https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்" என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications