பழனி முருகன் கோயிலில் அள்ள அள்ள தங்கம்.. மலை போல் குவிந்த பணம்.. கோடிகளை கொட்டிய பக்தர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் என்பது, அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடு ஆகும். இங்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படி வந்து செல்லும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 கிலோவிற்கு மேல் தங்க நகைகள் மற்றும் 2 கோடிக்கும் அதிகமான பணம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோயில்களில் பழனி முக்கியமான இடம் வகிக்கும். அதுவும் டாப் லிஸ்டில் இருக்கும். திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை, மருதமலை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோயில்கள் முக்கியமான இடம் வகிக்கும். அதன்பிறகு தான் மற்ற கோயில்கள் வரும்.

பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் தினமும் வந்து செல்லும் கோயிலாக இருக்கிறது. கோவை,ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்ட மக்களுக்கு மிகவும் நெருக்கமான கோயிலாக இருக்கிறது. பழனி முருகனுக்காக நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை இங்கு மிகமிக அதிகம்.
இதேபோல் தென்மாவட்டங்களிலும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குமே பழனி முருகனை தரிசிக்க அதிக அளவில் வருவார்கள்.. இதுதவிர கேரளாவில் உள்ள லட்சக்கணக்கானோருக்கு இஷ்ட தெய்வமாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு விஷேச நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம், நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பின்பு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
காணிக்கை எண்ணும் பணி
இந்த காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி நேற்று, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்ட உண்டியல்கள் எடுத்து வரப்பட்டு, அதில் செலுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளியிலான நகைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை
இந்த உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 கிடைத்தது. மேலும் தங்க பொருட்கள் 5 ஆயிரத்து 5 கிராம், வெள்ளி 11 கிலோ 438 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 1,324-ம் கிடைத்தன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications