கொடைக்கானல் லவ் டுடே..ஓராண்டில் கசந்த லிவ்இன்! பாய் பெஸ்ஸ்டிகளுடன் சேர்ந்து போட்டு தள்ளிய ’ஒத்தரோசா’
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இளைஞர் கொடூரமான முறையில் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவ் இன் முறையில் கணவன் மனைவி போல் வாழ்ந்த ஜோடி பிரிந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் சந்தித்த போது, ஆண் நண்பர்கள் மூலம் இளம்பெண் கொலை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தென்காசியை சேர்ந்த சூர்யா டி.ஜே.மியூசிக் இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார்.
இவரது தனியார் தங்கும் விடுதி அருகில் தங்கியிருந்த சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவர் மனைவி போல் திருமணம் நடைபெறாத நிலையில் லிவ்
இன் ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கொடைக்கானலில் வனத்துறை நிலம் அபகரிப்பு-

லிவ் இன்
இதனையடுத்து சூர்யா மது அருந்தும் பழக்கம் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால் ஸ்வேதா தனியாக பிரிந்து சென்னைக்கு சென்றதாகவும்
மேலும் சூர்யா தொலைபேசி எண்ணை தனது செல் போனில் பிளாக் செய்ததுடன் வாட்ஸ் அப்பிலும் பிளாக் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூம்பாறை கிராமத்தில் இருந்த சூர்யா கொடைக்கானல் முக்கிய குடியிருப்பு பகுதியான கல்லுக்குழி பகுதியில் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

மீண்டும் சந்திப்பு
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் ஸ்வேதா கொடைக்கானலுக்கு வருகை புரிந்து பம்பார்புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் பள்ளிகளில் யோகா ஆசிரியராக பணி புரிய வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் ஸ்வேதா தனது போனில் சூர்யா எண்ணை அன் பிளாக் செய்துள்ளார். மீண்டும் இருவரும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல்கள் பகிர்ந்து செல் போனில் பேசி நேரில் சந்தித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி சூர்யா தங்கியிருக்கும் கல்லுக்குழி பகுதிக்கு ஸ்வேதாவை அழைத்து சென்றுள்ளார்.

4 ஆண் நண்பர்கள்
அங்கு இருவரும் இரவு உணவை உண்டு உள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கை கலப்பு ஆனதாக கூறப்படுகிறது மேலும் வெந்நீரை ஸ்வேதா சூர்யாவின் வலது கையில் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்வேதா தனது ஆண் நண்பர்களை போனில் அழைத்து நான் கல்லுக்குழியில் உள்ள மலோனி குடிலில் இருக்கிறேன் தன்னை உடனடியாக அழைத்து செல்லுமாறு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு அவரது 4 ஆண் நண்பர்கள் வந்துள்ளனர்.

கொடூர கொலை
அங்கு ஸ்வேதா மற்றும் சூர்யாவிற்கு ஏற்பட்ட தகராறை ஸ்வேதா ஆண் நண்பர்கள் விலக்கும் போது எதிர்பாராதவிதமாக சூர்யா படியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஆண் நண்பர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், இதனையடுத்து கொடைக்கானல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது,தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஸ்வேதா மற்றும் ஆண் நண்பர்கள் நால்வரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசில் புகார்
அதனை தொடர்ந்து சூர்யாவின் தந்தை அய்யாதுரை கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனது மகனுக்கு தலை,கை மற்றும் கண்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வலது கையில் வெந்த தீ காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தனது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார் . மேலும் சூர்யாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்த நிலையில் சூர்யா இறப்பில் மர்மம் உள்ளது என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போராட்டம்
ஆனால் சூர்யாவுடன் தங்கியிருந்த ஸ்வேதா மற்றும் அவரது ஆண்நண்பர்களான கௌதம் ,அகில் ,பராந்தக சோழான் , நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருடன் இணைந்து கொலை செய்து உள்ளார் எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சூர்யாவின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சூர்யாவின் உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,

அதிரடி கைது
காவல் துறையினர் சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் கொடைக்கானல் காவல் துறையினர் இன்று மாலை உடற்கூறு ஆய்வில் சூர்யாவின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டையால் தலை பகுதியில் தாக்கிய காயங்கள் இருந்ததாகவும், நெஞ்சு பகுதிகளில் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து இளம்பெண் உள்ளிட்ட 5 நபர்களை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்களை நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு (IDENTIFICATION PAREDE) நடத்தவுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.