இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்
திண்டுக்கல் : கடந்த மாதம் நான்காம் தேதி நான்கு வயது சிறுமி ஷிவானி மர்மமான முறையில் உடலில் தீக்காயங்களுடன் இறந்த வழக்கில் கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் கௌரி தம்பதிக்கு ஷிவானி என்ற 4 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர்களது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா என்பவர், பல்லடத்துக்கு அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வரும் போது, சிறுமி ஷிவானியுடன் கீர்த்திகா நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டிற்கு வந்த கீர்த்திகா ஷிவானியை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று சிறிது நாள் வைத்திருந்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

மர்ம மரணம்
சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷிவானி அவர்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் கீர்த்திகா. இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை சோதித்த போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இதுகுறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் சிகிச்சையில் இருந்த ஷிவானி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் ராஜேஷ் குமார்-கீர்த்திகா தம்பதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் குழந்தை இல்லாததால் பல நாட்களாக ஏக்கத்தில் இருந்த ராஜேஷ்குமார் - கீர்த்தி தம்பதியினர் பிரகாஷின் குழந்தை ஷிவானியை அழைத்து வந்து கொடுமை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்களோடு மேலும் பல காயங்களும் உள்ளதால் இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணைக்கு பிறகு கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கிருத்திகா சிறுமியை கொடூரமாகக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

குண்டர் சட்டம்
கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கீர்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி முயற்சியால் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான் கொலை வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications