திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடி.. திண்டுக்கல்லில் பேனர் வைக்க தடை.. திமுகவினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு.. ஏன்?

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் கழக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க கூடாது என்றும், தற்போது பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அதனை உடனே அகற்ற வேண்டும் என திமுவின் துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது. விசேஷ நிகழ்ச்சிகள் முதல் துக்க நிகழ்ச்சிகள் வரை எங்கும், எதிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகளும் பேனர் கலாச்சாரத்தை தூக்கி பிடித்துள்ளன. இந்த பேனர் கலாசாரத்தை ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றி வருகின்றன.

திமுக இதுல எங்கே வந்தது? எடப்பாடி சொன்னதும்.. மறுத்த நீதிபதிகள்.. தமிழ் மொழியை பார்த்ததும் கமெண்ட்! திமுக இதுல எங்கே வந்தது? எடப்பாடி சொன்னதும்.. மறுத்த நீதிபதிகள்.. தமிழ் மொழியை பார்த்ததும் கமெண்ட்!

வரவேற்பு பேனர்கள்

வரவேற்பு பேனர்கள்

குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்படுகின்றன. மேலும் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள் முன்பு நோட்டீசாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல இடங்களில் பேனர்களாக மாறியுள்ளன. அதாவது நகரின் முக்கிய இடங்களில் நிகழ்ச்சி தொடர்பான விபரங்களும் மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்படும் சம்பவங்கள் இன்றும் கூட நடைமுறையில் உள்னள.

முற்றிலும் ஒழியவில்லை

முற்றிலும் ஒழியவில்லை

தமிழகத்தில் பேனர் விழுந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளதோடு மக்கள் படுகாயங்கள் அடைந்த வரலாறு தமிழகத்தில் உள்ள நிலையில் தற்போதும் பேனர் வைப்பது நிறுத்தப்படவில்லை. இப்போதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளன. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டு பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் கூட பேனர் கலாச்சாரம் இன்னும் தமிழகத்தில் இருந்து முழுவதுமாக ஒழிந்து போகவில்லை.

பேனர் வைக்க தடை - ஐ பெரியசாமி உத்தரவு

பேனர் வைக்க தடை - ஐ பெரியசாமி உத்தரவு

இந்நிலையில் தான் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமி இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதில், ‛‛திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கழக நிர்வாிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கழக நிகழ்ச்சிகளில் எக்காரணத்தை கொண்டும் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது. கழக கொடிகளை மட்டுமே பயன்டுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றம் கழக உடன்பிறப்புகள் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனே தங்களது பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார். பேனர் தொடர்பாக ஏற்படும் விபத்துகளையும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

முன்னதாக தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை கைவிட திமுக வலியுறுத்தி இருந்தது. கடந்த ஆண்டு திமுகவின் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர் எஸ் பாரதி, ‛பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் முற்றிலும் கைவிட வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலை மீறுவோர் யாராக இருந்தாலும் தலைமைக் கழகத்தின் நடவடிக்கை பாயும்'' என எச்சரித்து இருந்தார். இருப்பினும் ஆங்காங்கே கட்சியினர் பேனர் வைப்பது அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பேனர் வைக்க கூடாது என அமைச்சர் ஐ பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

English summary
DMK's Deputy General Secretary and Rural Development Minister I Periyasamy has ordered that no banners should be placed in Dindigul's party programs, and if any banners are being kept, they should be removed immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X