பழனியாண்டவனிடம் ஆட்டைய போட்ட ஊழியர்.. சிக்க வைத்த சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது , சுமார் 93 ஆயிரம் ரூபாயை திருடிய தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் தைப்பூசம் காரணமாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கை செலுத்துவது வழக்கம் பணம், தங்க வெள்ளி நகைகள் அமெரிக்க டாலர்கள் என பல்வேறு வகையான காணிக்கைகளை பாகதர்கள் செலுத்துவார்கள். இதற்காக கோவில் வளாகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்துவர்.

உண்டியல் எண்ணும் பணி

உண்டியல் எண்ணும் பணி

இந்த பணமானது மாதம் ஒருநாள் எனப்படும் திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைமீது நடைபெற்று வருகிறது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உண்டியல் பணம் திருட்டு

உண்டியல் பணம் திருட்டு

உண்டியல் எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் ராமகிருஷ்ணனை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது ராமகிருஷ்ணன் கோவில் உண்டியல் பணத்தில் இருந்து 93100 ரூபாயை திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கோவில் ஊழியர் கைது

கோவில் ஊழியர் கைது

இதையடுத்து பணத்தைப் கோவில் ஊழியர்கள் பறிமுதல் செய்து, திருச்சில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் திருடி பிடிபட்ட ராமகிருஷ்ணன் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியில் தற்காலிக தூய்மை பணியாளர் ஆக பணியாற்றி வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகிருஷ்ணன் இதுபோல உண்டியல் எண்ணிக்கையில் கலந்துகொண்டு பணத்தை திருடி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+