திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ.பெரியசாமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மகனுக்கு கிடைக்குமா? மகன் செந்திலுக்கு கை கொடுக்குமா ஆத்தூர்?

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் இப்போதே தொகுதிகளை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றன பெருந்தலைகள்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திமுகவின் அசைக்க முடியாத முகமாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி. தாம் லைம் லைட்டில் இருக்கும் போது மகன் ஐ.பி. செந்தில்குமாரையும் எம்.எல்.ஏ.வாக, மா.செ.வாக்கிவிட்டார் ஐ.பியார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமி வழக்கமாக போட்டியிடும் ஆத்தூர், மகன் செந்தில்குமார் போட்டியிடும் பழனி, கொறடா சக்கரபாணி போட்டியிடும் ஒட்டன்சத்திரம் மூன்றுமே திமுகவின் வெற்றிக்குரிய தொகுதிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை பழனி தொகுதியில் அப்படி சொல்லிவிட முடியுமா? என்கிற வகையில் ஒருவித லேசான தயக்கம் திமுகவினருக்கே உள்ளது.

மீண்டும் தேர்தல் களத்தில் 'திண்டுக்கல்' காந்திராஜன்.. ரீ என்ட்ரி கனவு நிறைவேறுமா?மீண்டும் தேர்தல் களத்தில் 'திண்டுக்கல்' காந்திராஜன்.. ரீ என்ட்ரி கனவு நிறைவேறுமா?

செந்தில்குமார் உடனடி அறிக்கை

செந்தில்குமார் உடனடி அறிக்கை

இதனால்தான் பழனி தொகுதியில் மிக மிக நுட்பமாக எந்த பிரச்சனையும் தம்மை சுற்றி வராத வகையில் கவனமாக செயல்படுகிறார் செந்தில். அண்மையில் கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கூட திமுக தலைமைக்கு முன்னரே கண்டனம் தெரிவித்து ஆச்சரியப்படுத்தி ஆதரவு பெற்றார் ஐபிஎஸ். இதற்கு பிறகுதான் மருதமலை முருகனை வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுதியை மாற்றுகிறாரா ஐபியார்?

தொகுதியை மாற்றுகிறாரா ஐபியார்?

தற்போதைய தொகுதி நிலவரத்தை முன்வைத்து ஐபி தரப்பு வேறொரு யோசனையில் தீவிரமாக இருக்கிறதாம். அதாவது வரப் போகும் சட்டசபை தேர்தலில் மகன் செந்திலை தமது சொந்த தொகுதியான ஆத்தூரில் நிறுத்தலாம் என யோசிக்கிறாராம் ஐபியார். அதேநேரத்தில் திமுகவின் வெற்றி ஏதோ ஒரு காரணத்தால் சாத்தியமே இல்லாமல் போகும் திண்டுக்கல் தொகுதியில் தாமே களமிறங்கலாம் என்கிற மற்றொரு யோசனையும் ஐபி தரப்புக்கு இருக்கிறதாம்.

வேடசந்தூர் திமுகவில் உட்கட்சி பூசல் உச்சம்... வெல்லும் வாய்ப்புகளை கொல்லும் தலைகள்- ஷாக் உ.பி.க்கள்வேடசந்தூர் திமுகவில் உட்கட்சி பூசல் உச்சம்... வெல்லும் வாய்ப்புகளை கொல்லும் தலைகள்- ஷாக் உ.பி.க்கள்

ஆத்தூர் தொகுதி நிலவரம்

ஆத்தூர் தொகுதி நிலவரம்

ஐபி தரப்பு இப்படி காய்நகர்த்தி பார்த்தாலும் கூட ஆத்தூர் தொகுதியில் ஐபி செந்திலுக்கு சாதகமான சூழ்நிலை உருவாவது கஷ்டம் என்கிறார்கள் சில சீனியர்கள். ஏனெனில் ஆத்தூர் தொகுதியில் தீர்மானிக்கும் ஜாதியினரான கவுடர்கள், மாற்று ஜாதியை சேர்ந்தவராக இருந்த போதும் தொடர்ந்து ஐபிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். இந்த நம்பிக்கை இப்போது கவுடர்களிடத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவதும் ஜாதி பிளஸ் கட்சி விவகாரம்தான்.

மாஜி து.சபா. காந்திராஜன்

மாஜி து.சபா. காந்திராஜன்

அதிமுகவில் துணை சபாநாயகராக இருந்த காந்திராஜன், திமுகவில் ஐக்கியமான போதும் அவருக்கான தேர்தல் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. வேடசந்தூர், திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட்டும் காந்திராஜனால் வெல்ல முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை காந்திராஜனுக்கு கொடுத்திருந்தால் எளிதாக வென்றிருக்க முடியும். ஆனால் கட்சிக்கே சம்பந்தமே இல்லாத ஒருவரை களமிறக்கி ஐபியார் வெல்ல வைத்ததை தங்களது ஜாதியினரால் ஜீரணிக்க முடியவில்லையா என்கின்றனர் ஆத்தூர் சீனியர் திமுகவினர்.

மாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்மாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்

தீர்மானிக்கும் வேடசந்தூர் தொகுதி?

தீர்மானிக்கும் வேடசந்தூர் தொகுதி?

இதனால் இம்முறை வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜனுக்கு சீட் கண்டிப்பாக கிடைக்க வேண்டும்; இல்லையெனில் ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி கவுடர்கள் வாக்கு நிச்சயம் திமுகவுக்கு போகவிடக் கூடாது என்கிற மனநிலையை இப்போதே வெளிப்படுத்தி வருகின்றனர். இதனைசுட்டிக்காட்டிதான் ஐபி செந்தில், ஆத்தூர் தொகுதிக்கு மாறினாலும் நிலைமை கை கொடுக்குமா? என்கிற சந்தேக கேள்வியை முன்வைக்கின்றனர்.

English summary
Sources said that Senior DMK Leader I Periyasamy may contes in Dindigul for upcoming Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X